ஆந்திரப் பிரதேச தலைநகராக அமராவதியை அறிவிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

ஆந்திரப் பிரதேச தலைநகராக அமராவதியை அறிவிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
Updated on
1 min read

புதுடெல்லி: ஆந்திரப் பிரதேசத்தின் ஒரே மற்றும் நிரந்தரத் தலைநகராக அமராவதியை அறிவிக்கும் மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நிறைவேற்றப்பட்டது.

ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு திருத்தம மசோதா 2026 மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் மீது விவாதம் நடத்தப்பட்டது. விவாதத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தன.

அதேநேரத்தில், ஆந்திரப் பிரதேச தலைநகராக அமராவதியை அமைப்பதற்காக தங்கள் நிலங்களை வழங்கிய விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை இந்த மசோதா குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மசோதாவுக்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் நன்றி தெரிவித்தார்.

ஆந்திரப் பிரதேச தலைநகராக அமராவதியை அறிவிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
ராகுல் காந்திக்கு தோல்விகளின் சதம் காத்திருக்கிறது: அசாமில் பிரதமர் மோடி பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in