ஆந்திராவில் உள்ளாட்சி இடஒதுக்கீடு 50% தாண்டக் கூடாது: உயர் நீதிமன்றம்

ஆந்திராவில் உள்ளாட்சி இடஒதுக்கீடு 50% தாண்டக் கூடாது: உயர் நீதிமன்றம்
Updated on: 
1 min read

விஜயவாடா: ஆந்திராவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி தலைவர்கள் மற்றும் மேயர்களுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதையொட்டி பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (பிசி) இந்த தேர்தலில் 34 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏற்கனவே அறிவித்தார்.

இதற்கு அமைச்சரவை, சட்டப்பேரவை மற்றும் மேலவைகளில் ஒப்புதல் பெறப்பட்டு 2 அரசாணைகளையும் அரசு வெளியிட்டது. தற்போது இந்த இரண்டு அரசாணைகளையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மேலும், உள்ளாட்சி தேர்தலில் மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது எனவும், 6 வாரங்களுக்குள் தேர்தல் பணிகளை அறிவிக்குமாறும் மாநில அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டது.

எஸ்ஐஆர் பணிகள் முடிந்து முழு வாக்காளர் பட்டியல் வந்த பிறகே தேர்தலை அறிவிக்க வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொடர்ந்த வழக்கையும், வார்டுகளை மறுசீரமைத்த பிறகே தேர்தல் நடத்த வேண்டும் என்ற மனுவையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆந்திராவில் உள்ளாட்சி இடஒதுக்கீடு 50% தாண்டக் கூடாது: உயர் நீதிமன்றம்
திருமலையில் அலைமோதும் பக்தர்கள் - சுவாமி தரிசனம் செய்ய 30 மணி நேரம் காத்திருப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in