சட்டங்களும் விதிமுறைகளும் மக்களை துன்புறுத்துவதாக இருக்கக் கூடாது: பிரதமர் மோடி வலியுறுத்தல்

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது, பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. படம்: பிடிஐ

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது, பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. படம்: பிடிஐ

Updated on
2 min read

புதுடெல்லி: சட்​டங்​களும் விதி​முறை​களும் அமைப்பை சரிசெய்​வதற்​காக உரு​வாக்​கப்​படு​கின்​றன. ஆனால் அவை மக்​களை துன்​புறுத்​து​வ​தாக இருக்​கக் கூடாது என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

விமானப் போக்​கு​வரத்து இயக்​குநரகம் (டிஜிசிஏ) பைலட் உள்​ளிட்ட விமான ஊழியர்​களின் பணிநேர வரம்பு (எப்​டிடிஎல்) விதி​களை கடந்த ஆண்டு வெளி​யிட்​டது. பைலட்​களின் இரவுப் பணி நேரத்தை குறைக்​க​வும் ஓய்வு நேரத்தை அதி​கரிக்​க​வும் வகை செய்​யும் இந்த விதி​கள் கடந்த நவம்​பர் மாதம் முழு அளவில் அமலுக்கு வந்​தது. இதனால் ஊழியர்​களுக்கு பற்​றாக்​குறை ஏற்​பட்டு இண்​டிகோ நிறுவன விமான சேவை பாதிக்​கப்​பட்​டது.

கடந்த ஒரு வார​மாக ஆயிரக்​கணக்​கான இண்​டிகோ விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​டன. இதனால் பயணி​கள் அவதிக்​குள்​ளா​யினர். இதையடுத்​து, புதிய விதி​கள் தற்​காலிக​மாகநிறுத்தி வைக்​கப்​பட்​டது. ஆனாலும், இண்​டிகோ விமான சேவை இன்​னும் சீராக​வில்​லை. நேற்​றும் பல வழித்​தடங்​களில் விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்டன.

இந்​நிலை​யில், தேசிய ஜனநா யக கூட்​டணி (என்​டிஏ) எம்​.பி.க்​கள் கூட்​டம் பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் டெல்லியில் நேற்று நடை​பெற்​றது. இந்​தக் கூட்​டத்​துக்​குப் பிறகு நாடாளு​மன்ற விவ​காரத் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பிஹார் தேர்​தலில் என்​டிஏ கூட்​டணி வெற்றி பெற்​றதற்​காக பிரதமர் மோடிக்கு கூட்​ட​ணிக் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​தனர். எம்​.பி.க்​கள் தங்​கள் தொகுதி நலனுக்​காக பாடுபட வேண்​டும் என்று பிரதமர் கேட்​டுக்​கொண்​டார்.

பொது​மக்​களின் வாழ்க்​கையை எளி​தாக்​க​வும் அவர்​கள் பிரச்​சினை​யின்றி வாழ்​வதை உறுதி செய்​ய​வும் அனைத்து துறை​களி​லும் சீர்​திருத்​தங்​கள் மேற்​கொள்ள வேண்​டியது அவசி​யம் என்று அவர் வலி​யுறுத்​தி​னார். இண்​டிகோ விமான சேவை​யில் ஏற்​பட்ட குளறு​படி குறித்து பிரதமர் மோடி கவலை தெரி​வித்​தார். சட்​டங்​களும் விதி​முறை​களும் அமைப்பை சரிசெய்​வதற்​காக உரு​வாக்​கப்​படு​வ​தாக​வும் அவை மக்​களை துன்​புறுத்​து​வதற்​காக அல்ல என்​றும் அவர் தெரி​வித்​தார். இவ்​வாறு கிரண் ரிஜிஜு தெரி​வித்​தார்.

இண்​டிகோ​தான் பொறுப்பு: நாடாளு​மன்ற மக்​களவை​யில் விமானப் போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் ராம் மோகன் நாயுடு பேசும்​போது, “இண்​டிகோ விமான சேவை​யில் ஏற்​பட்ட குளறு​படிக்கு அந்த நிறு​வனம்​தான் பொறுப்​பேற்க வேண்​டும். அதே​நேரம் அந்​நிறு​வனத்​தின் விமான சேவை வேக​மாக சீரடைந்து வரு​கிறது. ரத்து செய்​யப்​பட்ட விமானங்​களில் முன்​ப​திவு செய்​திருந்த பயணி​களின் கட்​ட​ணங்​கள் மற்​றும் அவர்​களது உடமை​களை திருப்​பித் தர உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்டு அதை அரசு கண்​காணித்து வரு​கிறது.

மேலும் இண்​டிகோ விமான நிறு​வனத்​தின் உயர் அதி​காரி​களிடம் விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இதன் அடிப்​படை​யில் உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும். பயணி​களின் வசதி மற்​றும் கண்​ணி​யத்தை பாது​காக்க நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. மேலும் நாட்​டின் விமான போக்​கு​வரத்​துத் துறையை, பயணி​களின் வசதியை மைய​மாகக் கொண்​ட​தாக மாற்ற நீண்​ட​கால நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது.

பெரிய நிறு​வன​மாக இருந்​தா​லும் சிறிய நிறு​வன​மாக இருந்​தா​லும் பயணி​களுக்கு சிரமம் ஏற்​படுத்​து​வதை அரசு அனு​ம​திக்​காது. மற்ற அனைத்து விமான நிறு​வனங்​களும் சீராக இயங்கி வரு​கின்​றன. விமான நிலை​யங்​கள் இயல்​புநிலைக்கு திரும்பி வரு​கின்​றன” என்​றார்.

10% விமான சேவையை குறைக்க இண்டிகோ நிறுவனத்துக்கு உத்​தரவு: இண்டிகோ விமான நிறுவனம் இது​வரை உள்நாடு, வெளிநாடு என தின​மும் 2,300-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி வந்​தது. இந்நிலையில்,கடந்த சில நாட்களாக இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, 10 சதவீத விமான சேவையை குறைக்க வேண்​டும் என இண்டிகோ நிறுவனத்துக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்​தர​விட்டுள்ளது.

இதன்​மூலம் அந்​நிறு​வனம் 230 விமான சேவைகளை குறைக்க வேண்டி இருக்​கும். இதுதவிர மேலும் சில நடவடிக்கைகள் அந்நிறுவனம் மீது எடுக்கப்படும் எனத் தெரிகிறது.இண்டிகோ விமான சேவை குறைக்கப்பட்ட நிலையில், அதை ஈடுகட்டும் வகையில் மற்ற விமான நிறுவனங்களுக்கு கூடுதல் விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட உள்ளது.

1,800 விமானங்கள் இயக்கம்: இதனிடையே, இண்டிகோ நிறுவன சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் நேற்று கூறும்போது, “இண்டிகோ விமான சேவை இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. கடந்த 5-ம் தேதி 700 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், 6-ம் தேதி 1,500, 7-ம் தேதி 1,650, 8-ம் தேதி 1,800 விமானங்கள் இயக்கப்பட்டன. இன்று (நேற்று) அனைத்து 138 வழித்தடங்களிலும் 1,800-க்கும் கூடுதலான விமானங்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படுகின்றன. கடந்த கால பிரச்சினைகளை ஆராய்ந்து அதை சரிசெய்து மீண்டும் வலிமை பெறுவோம்” என்றார்.

<div class="paragraphs"><p>தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது, பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. படம்: பிடிஐ</p></div>
நீதிபதி சுவாமிநாதனை நீக்கக் கோரி மனு: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 120 பேர் சேர்ந்து தீர்மானம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in