“சாதி, இனப் பாகுபாட்டுக்கு எதிரான சட்டம் கொண்டு வரப்​பட ​வேண்​டும்” - ராகுல் காந்தி வலியுறுத்தல்

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

Updated on
1 min read

புதுடெல்லி: சா​தி, இனப் பாகு​பாட்​டுக்கு எதி​ரான சட்​டம் கொண்டு வரப்​பட ​வேண்​டும் என்று மக்​களவை எதிர்​க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி வலி​யுறுத்​தி​னார்.

சாதிப் ​பாகு​பாடு காரண​மாக ஹைத​ரா​பாத் பல்​கலைக்​கழகத்​தைச் சேர்ந்த தலித் மாணவர் ரோஹித் வேமுலா கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 17-ல் தற்​கொலை செய்​து​ கொண்​டார். அவருடைய 10-வது நினைவு தினத்தையொட்டி மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் தளத்​தில் கூறி​யுள்​ள​தாவது:

ரோஹித் இறந்து 10 ஆண்​டு​களான பின்​னரும் நிலைமை மாற​வில்​லை. ஹைத​ரா​பாத் பல்​கலைக்​கழக வளாகத்​தில் அதே நிலை​மை​தான் நீடிக்​கிறது. அதே வன்​முறை, அதே பாகு​பாடு நீடிக்​கிறது. கல்வி நிறு​வனங்​களில் சாதி அடிப்​படையி​லான பாகு​பாடு ஒரு குற்​ற​மாக மாற வேண்​டும். குற்​ற​வாளி​கள் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்பட வேண்​டும், சாதி, இனப் பாகு​பாட்​டுக்கு எதி​ரான சட்​டம் கொண்டு வரப்பட வேண்​டும்.

கர்​நாட​கா, தெலங்​கானா மாநிலங்​களை ஆளும் காங்​கிரஸ் அரசுகள், சாதிப் பாகு​பாட்​டுக்கு எதி​ரான சட்​டங்​களை விரை​வில் கொண்டு வரவுள்​ளன. அதைப் போல நாடு முழு​வதும் சட்​டம் வரவேண்​டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ம.பி.​யில் ஆறு​தல்: மத்​திய பிரதேச மாநிலம் இந்​தூரில், மாசடைந்த குடிநீரைக் குடித்த பலர் உயி​ரிழந்​தனர். மேலும் பலர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இந்​நிலை​யில், மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெற்று வரு​வோரை, ராகுல் நேற்று நேரில் சந்​தித்து நலம் விசா​ரித்​தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் ராகுல் கூறும்போது, ‘‘மக்​களுக்கு சுத்​த​மான தண்​ணீரை வழங்​கு​வதும் மாசு​பாட்​டைக் குறைப்​பதும் மாநில அரசாங்​கத்​தின் பொறுப்​பு. ஆனால் மாநில அரசோ இந்​தப் பொறுப்​பு​களை நிறைவேற்​ற​வில்​லை. இந்​தூரில் ஏற்​பட்ட குடிநீர் பேரழி​வுக்கு மாநில அரசே பொறுப்​பேற்​க வேண்​டும்​’’ என்றார்.

<div class="paragraphs"><p>ராகுல் காந்தி</p></div>
அசாம் போடோ பழங்குடியினரின் ‘பகுரும்பா’ நடனத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in