மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வராகிறார் அஜித் பவார் மனைவி

சுனேத்ரா பவார்

சுனேத்ரா பவார்

Updated on
1 min read

மும்பை: தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்​சித் தலைவர் (என்​சிபி) அஜித் பவார் விமான விபத்​தில் உயி​ரிழந்ததை தொடர்ந்து மகா​ராஷ்டிர மாநில துணை முதல்​வ​ராக அவரது மனைவி சுனேத்ரா பவார் இன்று பதவி​யேற்க உள்​ளார்.

மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த 28-ம் தேதி விமான விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, மகா​ராஷ்டிர அரசி​யலில் திடீரென ஏற்​பட்​டுள்ள வெற்​றிடத்தை தொடர்ந்து, துணை முதல்​வர் பதவிக்​கான முன்​மொழிவை அவரது மனைவி சுனேத்ரா பவார் ஏற்​றுக்​கொண்​டுள்​ளார்.

தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள சுனேத்ரா இன்​று (31-ம் தேதி) மாலை 5 மணிக்கு துணை முதல்​வ​ராக பதவி​யேற்க உள்​ளார். அவருக்கு கலால், விளை​யாட்​டுத் துறை ஒதுக்​கப்பட வாய்ப்பு உள்​ளது என்று என்சிபி வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

பிப்​ர​வரி 7-ம் தேதி புனே ஜில்லா பரிஷத் தேர்​தல் நடை​பெற உள்ள நிலை​யில், கட்​சி​யின் செல்வாக்கை உயர்த்​தும் நோக்​கில் என்​சிபி-​யின் மூத்த தலை​வர்​கள் சுனேத்ரா பவாரின் பெயரை இந்​த பதவிக்கு பரிந்​துரைத்​தனர். பவார் குடும்​பத்​தினரிடையே விரி​வான ஆலோ​சனை​கள் நடத்​தப்​பட்ட பின்​னரே, இந்த முடிவை அவர் ஏற்​றுக்​கொண்​ட​தாக தெரி​கிறது.

சுனேத்ரா துணை முதல்​வ​ராக பதவி​யேற்​ப​தில் தங்​களுக்கு எந்த ஆட்​சேபமும் இல்லை என முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ் தெரி​வித்​து​விட்டதாக தேசி​ய​வாத காங்​கிரஸ் தலை​வர் சகன் புஜ்​பால்​ கூறினார். இன்று நடைபெற உள்ள தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்​சி​யின் (என்​சிபி) சட்​டப்​பேர​வைக் குழுக் கூட்​டத்தில் அக்​கட்​சி​யின் சட்​டப்​பேரவை கட்​சித் தலை​வ​ராக சுனேத்ரா பவார் தேர்ந்​தெடுக்​கப்பட உள்​ள​தாக​வும் அவர் தெரி​வித்​தார்.

மகாராஷ்டிர பட்​ஜெட் கூட்​டத்​தொடர் மார்ச்சில் நடக்க உள்​ள​தால், நிதித்​துறையை தற்​காலிக​மாக முதல்​வர் பட்​னா​விஸ் தனது கட்​டுப்​பாட்டில் வைத்​திருப்​பார். பின்​னர் அது தேசி​ய​வாத காங்​கிரஸிடம் ஒப்​படைக்​கப்​படும் என்​றும் கூறப்​படு​கிறது.

<div class="paragraphs"><p>சுனேத்ரா பவார்</p></div>
மாதவிடாய் சுகாதாரம் என்பது அடிப்படை உரிமை: பள்ளியில் இலவச நாப்கின் - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in