டெல்லியின் முக்கிய கோயில்களை தாக்க திட்டமிட்ட லஷ்கர் கமாண்டர் ஷபீர் அகமது லோன் கைது

டெல்லியின் முக்கிய கோயில்களை தாக்க திட்டமிட்ட லஷ்கர் கமாண்டர் ஷபீர் அகமது லோன் கைது
Updated on
1 min read

புதுடெல்லி: ​நாட்​டில் உள்ள முக்​கிய கோயில்​கள் மீது தாக்​குதல் நடத்த திட்​ட​மிட்ட லஷ்கர்​-இ-தொய்பா கமாண்​டர் ஷபீர் அகமது லோன் டெல்லி போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

இந்​தி​யா​வால் மிக​வும் தீவிர​மாக தேடப்​படும் தீவிர​வா​தி​களில் ஒரு​வர் லஷ்கர்​-இ-தொய்பா கமாண்​டர் ஷபீர் அகமது லோன். இவர், தமிழ்​நாட்​டின் திருப்​பூர், மேற்கு வங்​கத்​தின் மால்டா மற்றும் டெல்​லி​யில் இருந்து இளைஞர்​களைத் திரட்​டி​யுள்​ளார். சந்தேகத்​தைத் தவிர்க்க, தென்​னிந்​தி​யா​வில் வசிப்​பவர்​களை வட இந்​தி​யா​வில் தாக்​குதல் நடத்​த​வும், வட இந்​தி​யர்​களை தெற்​கில் பயன்​படுத்​த​வும் அவர் திட்​ட​மிட்​டிருந்​தார்.

அவர் நியமித்த நபர்​கள் பல இடங்​களை உளவு பார்த்​துள்​ளனர். நீண்ட கால இடைவெளி​யில் தொடர் குண்​டு​ வெடிப்​பு​களை நடத்து​வதே இவர்​களது திட்​ட​மாக இருந்​துள்​ளது. இதே​போல், மேற்கு வங்​கத்​தில் சட்​ட ​விரோத​மாக வசிக்​கும் வங்கதேசத்தினரைத் திரட்​டி, குறிப்​பாகக் கோயில்​களை உளவு பார்க்க அவர்களுக்கு உத்​தர​விட்​டிருந்​தார். டெல்லி சாந்​தினி சவுக்கில் உள்ள கவுரி சங்​கர் கோயில் மற்​றும் கல்​காஜி கோயில்​களை உளவு பார்க்க லோன் உத்​தர​விட்​டது விசா​ரணை​யில் உறுதியானது.

நேபாளத்​தில் இருந்து செயல்​பட்டு வந்த லோன், தனது கூட்டாளிகளின் கைதால் அதிர்ச்​சி​யடைந்​து, நிலை​மை​யைச் சீரமைக்க இந்​தி​யா​வுக்​குள் நுழைய முயன்​றுள்​ளார். இதை கண்காணித்து வந்த டெல்லி போலீ​ஸின் சிறப்​புப் படை​யினர் காசிப்​பூரில் வைத்து அவரை கைது செய்​துள்​ளனர்​. இதன்​ மூலம் மிகப்​பெரிய அளவி​லான தீவிர​வாத ​தாக்​குதல்​ முறியடிக்கப்பட்டுள்​ளது.

டெல்லியின் முக்கிய கோயில்களை தாக்க திட்டமிட்ட லஷ்கர் கமாண்டர் ஷபீர் அகமது லோன் கைது
கர்நாடக எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கு ஐபிஎல் டிக்கெட் இலவசம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in