

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் லகாமா என்ற இடத்தில் நேற்று அதிகாலை மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பாரமுல்லா - உரி நெடுஞ்சாலையை மூடின.
இதையடுத்து வாகனங்கள் பந்தி -பரன்பிலன் - டாச்சி வழியாக உரிக்கு திருப்பி விடப்பட்டன. இடிபாடுகள் அகற்றப்பட்ட பின் அங்கு போக்கு வரத்து மீண்டும் சீராகும் என கூறப்படுகிறது. இதற்கு இடையில் ஜம்முவின் பந்தலாப் பகுதியில் நேற்று புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது. இதில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.