மத்திய அமைச்சர், எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் எல்​.​முருகன்

மத்திய அமைச்சர், எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் எல்​.​முருகன்
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்​தில் பாஜகவை வலுப்​படுத்​தும் நோக்​கில், எல்​.​முரு​கன் தனது மத்​திய இணை அமைச்​சர், எம்.பி. பதவியை ராஜி​னாமா செய்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழு​தி​யுள்​ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி தமிழக பாஜக மாநிலத் தலை​வ​ராக எல்​.​முரு​கன் நியமிக்​கப்​பட்​டார். அதே ஆண்டு தமிழகத்​தில் பாஜக சார்​பில் நடை​பெற்ற வேல் யாத்​திரையை இரு​முறை முன்​னின்று நடத்​தி​னார். அப்​போது, இரண்டு முறை​யும் தமிழக அரசால் கைது செய்​யப்​பட்​டார். 2021-ம் ஆண்டு நடை​பெற்ற தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தாராபுரம் தொகு​தி​யில் போட்​டி​யிட்ட அவர், திமுக வேட்​பாளரிடம் வெற்றி வாய்ப்பை இழந்​தார்.

இருப்​பினும், அவர் மாநிலத் தலை​வ​ராக இருந்​த​போது பாஜக சார்​பில் போட்​டி​யிட்ட 4 பேர் சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களாகத் தேர்​வாகினர். இதையடுத்​து, மத்​திய பிரதேச மாநிலத்​தில் இருந்து மாநிலங்​களவை உறுப்​பின​ராகத் தேர்வு செய்​யப்​பட்​டு, 2021-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி மீன்​வளம், கால்​நடை பராமரிப்பு மற்​றும் பால்​வளத் துறை, தகவல் மற்​றும் ஒலிபரப்​புத் துறை ஆகிய​வற்​றின் இணை அமைச்​ச​ராக எல்​.​முரு​கன் பொறுப்​பேற்​றார்.

தொடர்ந்​து, 2024-ம் ஆண்​டிலும் மத்​திய பிரதேசத்​தில் இருந்து மாநிலங்​களவை உறுப்​பின​ராகத் தேர்வு செய்​யப்​பட்ட அவர், மத்​திய இணை அமைச்​ச​ராகப் பணி​யாற்றி வரு​கிறார். இந்​நிலை​யில், தமிழகத்​தில் கட்​சிப் பணி​களில் முழு​மை​யாக ஈடுபட விரும்​பி, தனது பதவி​களில் இருந்து விடுவிக்​கக் கோரி பிரதமர் மோடிக்​குக் கடிதம் எழு​தி​யுள்​ளார்.

அந்​தக் கடிதத்​தில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் கட்​சியை வலுப்​படுத்​தும் பணி​யில் முழுநேர​மாக ஈடு​படு​வதற்​காக, மத்​திய இணை அமைச்​சர் மற்​றும் மாநிலங்​களவை உறுப்​பினர் பதவி​களில் இருந்து என்னை விடுவிக்​கு​மாறு கேட்​டுக்​கொள்​கிறேன்.

தமிழகத்​தின் ஒவ்​வொரு கிராமத்​துக்​கும், வீதிக்​கும் சென்று மக்​களைச் சந்​தித்​து, கட்​சித் தொண்​டர்​களு​டன் இணைந்து மாநிலத்​தின் அனைத்​துப் பகு​தி​களி​லும் பாஜக​வின் வளர்ச்​சியை விரிவுபடுத்த விரும்​பு​கிறேன். மேலும், 2029 மக்​கள​வைத் தேர்​தலுக்​குக் கட்​சி​யைத் தயார்​படுத்​தி, தங்​களின் தலை​மை​யில் தமிழகத்​தில் இருந்து அதிக இடங்​களில் வெற்றி பெறு​வதற்​காக எனது முழு நேரத்​தை​யும் ஆற்​றலை​யும் அர்ப்​பணிக்க விரும்​பு​கிறேன். கடந்த ஐந்து ஆண்​டு​களாகத் தங்​களின் தலை​மையி​லான அரசில் பணி​யாற்ற வாய்ப்​பளித்​ததற்கு நன்​றி. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

நயி​னார் நாகேந்​திரனுக்கு வாய்ப்​பா? - தமிழக பாஜக​வின் தற்​போதைய மாநிலத் தலை​வ​ராக இருக்​கும் நயி​னார் நாகேந்​திரனை மாற்​றத் தலைமை திட்​ட​மிட்டு வரு​வ​தாகக் கூறப்​படு​கிறது. மாநிலத் தலை​வர் பொறுப்​பிலிருந்து விடுவிக்​கப்​பட்​டு, அவருக்கு மத்​திய அமைச்​சர​வை​யில் முக்​கியப் பொறுப்பு வழங்​கப்பட அதிக வாய்ப்​பு உள்​ள​தாகப் கூறப்​படு​கிறது.

மத்திய அமைச்சர், எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் எல்​.​முருகன்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு: நதிநீர் இணைப்பு பற்றி பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in