காற்று மாசுப் பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்: முன்​னாள் ஐபிஎஸ் அதி​காரி கிரண் பேடி வேண்டுகோள்

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

புதுடெல்லி: காற்று மாசுப் பிரச்சினையிலிருந்து டெல்லி நகரை மீட்க பிரதமர் மோடி தலை​யிட வேண்​டும் என்று பாஜக மூத்த தலை​வரும், முன்​னாள் ஐபிஎஸ் அதி​காரி​யு​மான கிரண் பேடி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

இதுதொடர்​பாக தனது எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் கிரண் பேடி நேற்று கூறிய​தாவது: நாட்​டின் தலைநகர் டெல்​லி​யில் காற்று மாசுப் பிரச்​சினை அதி​க​மாக உள்​ளது. காற்​றின் தரக் குறி​யீடு மோச​மான நிலைக்​குச் சென்​றுள்​ளது. இந்த நிலை நீடித்​தால் டெல்​லி​யில் வாழும் மக்​களின் சுகா​தா​ரம் கேள்விக்​குறி​யாகிவிடும்.

டெல்லி நகர ஆட்​சி, அதி​காரத்தை ரிமோட் கன்ட்​ரோல் மூலம் யாராலும் கட்​டப்​படுத்த முடி​யாது. அதி​காரி​கள் தெரு​வில் இறங்கி தூசு நிறைந்த பகு​தி​யில் நிற்க வேண்​டும், அதே காற்றை சுவாசிக்க வேண்​டும், அவசர​மாக செயல்பட வேண்​டும்.

டெல்​லி​யில் உள்ள அரசு அதி​காரி​கள், தங்​களது அலு​வல​கங்​களை விட்​டு​விட்டு வீதிக்கு வந்து நிலை​மையை ஆராய்ந்​தால்​தான் உண்மை நிலை அவர்​களுக்​குத் தெரிய​வரும். சுத்​தம் செய்​யப்​பட்ட அறைக்​குள் அமர்ந்​து​கொண்டு நிர்​வாகம் செய்ய முடி​யாது.

டெல்​லி​யில் காற்று மாசுவைக் குறைப்​ப​தற்​கான நடவடிக்​கை​களில் பிரதமர் நரேந்​திர மோடி நேரடி​யாகத் தலை​யிட வேண்​டும். காற்று மாசு​பாடு​களைக் குறைப்​ப​தற்​கான முயற்​சிகளில் நேரடி​யாக பிரதமர் மோடி வழிநடத்​தவேண்​டும்.

நான் புதுச்​சேரி​யில் துணை நிலை ஆளுந​ராக இருந்​த​போது பிரதமருடன் பலமுறை பேசி​யுள்​ளேன். பல்​வேறு தேசிய சவால்​கள் எழுந்​த​போது அதை கையாள்​வது எவ்​வாறு என்​பதை எனக்கு உணர்த்தி இருக்​கிறீர்​கள். காலக்​கெடு மற்​றும் இலக்​கு​களை அடைய அனை​வரும் உங்​களது தூண்​டு​தலால் உத்​வேகம் பெற்​றனர்.

எனவே, அலு​வலக அறை​களில் உட்​கார்ந்து கொண்டு ஒரு​வர் மீது ஒரு​வர் குறை​களைச் சொல்​லாமல் அரசு அதி​காரி​கள், அலு​வலர்​கள், ஊழியர்​கள் தெரு​வில் இறங்கி நடக்க வேண்​டும் (காரில் செல்​லக்​கூ​டாது). புகைமூட்​டம் நிறைந்த தெரு​வுக்​குள் நுழை​யும்​போது​தான் காற்​றின் தரக்​குறி​யீடு அதி​காரி​களுக்​குத் தெரிய​வரும். கள நிலைமை அதி​காரி​களுக்கு புரி​யும்.

தின​மும் வெளியே வந்து ஒவ்​வொரு முறை​யும் வீதி​யில் நடக்​கவேண்​டும். ஒவ்​வொரு முறை நடக்​கும்​போது ஒவ்​வொரு வித​மான திட்​டங்​கள் வெளியே வரும்​. இவ்​வாறு அவர்​ அதில்​ தெரி​வித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
ஏர்பஸ் ஏ320 விமானங்களில் மென்பொருளை மாற்ற உத்தரவு: விமான சேவைகள் பாதிக்க வாய்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in