மலையேற்றத்தின்போது கர்நாடக காட்டில் காணாமல் போன கேரள பெண் 4 நாட்களுக்கு பிறகு மீட்பு

மலையேற்றத்தின்போது கர்நாடக காட்டில் காணாமல் போன கேரள பெண் 4 நாட்களுக்கு பிறகு மீட்பு
Updated on
1 min read

பெங்களூரு: கர்​நாட​கா​வில் மலை​யேற்​றத்​தின்​போது காணா​மல் போன கேரளாவைச் சேர்ந்த பெண் 4 நாட்​களுக்கு பிறகு பத்திரமாக மீட்​கப்​பட்​டார்.

கேரள மாநிலம் கோழிக்​கோடு மாவட்​டம் நாடபுரத்தை சேர்ந்​தவர் சரண்யா (36). மென்​பொருள் பொறி​யாள​ரான இவர் சுற்​றுச்​சூழல் ஆர்​வல​ராக​வும், வன புகைப்பட கலைஞ​ராக​வும் செயல்​பட்டு வருகிறார். இந்​நிலை​யில் இவர் கடந்த 2-ம் தேதி கர்​நாடக மாநிலம் குடகு மாவட்​டம் தண்​டி​யாண்​டமோல் மலைப்​பகு​திக்கு தன் குழு​வினர் 7 பேருடன் மலை​யேற்​றத்​துக்கு சென்​றார்.

அன்று மாலை 6.30 மணி​யள​வில் தண்​டி​யாண்​டமோல் மலை அடி​வாரத்​தில் சென்று கொண்​டிருந்தபோது வழக்​க​மான மலை​யேற்ற பாதையை சரண்யா தவற​விட்​டார். அவருடன் மலை​யேற்​றம் சென்​றவர்​கள் விடு​திக்கு திரும்​பிய நிலை​யில் சரண்யா மட்​டும் திரும்​ப​வில்​லை. அவரது செல்​போன் எண்​ணும் தொடர்பு எல்​லைக்கு அப்​பால் இருந்​த​து.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்​யா​வின் நண்​பர்​கள் குடகு மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அலு​வல​கத்​தி​லும் வன கண்காணிப்பு அதி​காரி​யிட​மும் புகார் அளித்​தனர். இதையடுத்து சரண்​யாவை மீட்க வன கண்​காணிப்பு காவலர்​கள் மற்​றும் நக்சல் ஒழிப்பு படையை சேர்ந்த 10 பேர் கொண்ட மீட்பு குழுவை அமைத்​தனர்.

இந்த குழு கடந்த 4 நாட்​களாக குடகு மலைப் பகு​தி​களில் பல்​வேறு திசைகளில் தீவிர தேடு​தல் வேட்​டை​யில் ஈடு​பட்​டனர். இந்நிலையில் நேற்று காலை​யில் குடகு வனப்​பகு​தி​யில் உள்ள ஓடை​யின் அருகே குகை​யில் இருந்த சரண்​யாவை பத்​திர​மாக மீட்டனர்.

நான் பயப்படவில்லை: இது குறித்து சரண்யா கூறுகை​யில், "கடந்த 2ம் தேதி மாலை​யில் இருந்து என்​னால் முடிந்த வரை வழியை தேடி நடந்​துக்​கொண்டே இருந்​தேன். செல்​போனில் சார்​ஜும், டவரும் இல்​லாத​தால் யாரை​யும் தொடர்​பு​கொள்ள முடிய​வில்​லை. எனக்கு காட்​டின் இருட்​டும், யானை போன்ற விலங்​கு​கள் மீது எந்த பயமும் இல்​லை.

எவ்​வளவு தூரம் நடக்க முடி​யுமோ அவ்​வளவு தூரம் நடந்​து ​கொண்டே இருந்​தேன். காட்​டாறுகளில் பாய்ந்த நீரை குடித்​து, அங்கு கிடைத்த பழங்​களை தின்று 4 நாட்​கள் தெம்​பாகவே இருந்தேன். அடிக்​கடி கன மழை கொட்டி தீர்த்​த​தால் எனது உடைகள் எல்​லாம் நனைந்​து​விட்​டன. அதனால் மிக​வும் குளி​ராக இருந்​தது. மற்​றபடி எனக்கு அச்​சம் என்​பதே இருக்​க​வில்​லை" என தைரிய​மாக கூறி​னார்.

சரண்​யா​வின் துணிச்​சலை கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமை​யா, துணை முதல்​வர் டி.கே.சிவகு​மார், வனத்​துறை அமைச்​சர் ஈஷ்வர் காண்ட்ரே உள்​ளிட்​டோர் பாராட்​டினர். சித்​த​ராமையா கூறுகையில், "அந்த பெண்​மணி மிக​வும் துணிச்​சலானவ​ராக தெரி​கிறார். அவரது குரலில் எந்த பயமும் இல்​லை. அவரை செல்போனில் தொடர்​பு​கொண்டு வாழ்த்​தினேன். கேரள மாநிலத்தில் உள்ள அவரது வீட்​டில் பத்​திர​மாக கொண்​டு​போய் விடு​மாறு வனத்​துறை அதி​காரி​களுக்​கு உத்​தர​விட்​டுள்​ளேன்​" என்றார்​.

மலையேற்றத்தின்போது கர்நாடக காட்டில் காணாமல் போன கேரள பெண் 4 நாட்களுக்கு பிறகு மீட்பு
தி.நகர் தொகுதியில் தீயாய் வேலை செய்யும் கட்சிகள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in