கேரளாவில் வீட்டுக்கு அருகே பணி மையம் ஏற்படுத்த திட்டம்

கேரளாவில் வீட்டுக்கு அருகே பணி மையம் ஏற்படுத்த திட்டம்
Updated on
1 min read

திருவனந்தபுரம்: வீட்​டுக்கு அருகே பணி (டபிள்​யூஎன்​எச்) மையம் என்று அழைக்​கப்​படும் புதிய திட்​டம் கேரளா​வில் 19-ம் தேதி தொடங்​கப்​பட​வுள்​ளது.

இதுகுறித்து கேரள நிதித்​துறை அமைச்​சர் கே.என்​.​பால​கோ​பால் கூறிய​தாவது: கேரள மாநிலத்​தின் முதலா​வது வீட்​டுக்கு அருகே பணி(டபிள்​யூஎன்​எச்) மையத்தை கொட்​டாரக்​க​ரா​வில் முதல்​வர் பின​ராயி விஜயன் 19-ம் தேதி தொடங்கி வைப்​பார்.

இங்​குள்ள பிஎஸ்​என்​எல் நிறு​வனம் சீரமைக்​கப்​பட்டு டபிள்​யூஎன்​எச் மையம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இங்கு உலகத் தரத்​தில் பணி நிலை​யங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இந்த மையங்​களை தொழில்​நுட்ப நிபுணர்​கள் பயன்​படுத்​திக் கொள்​ளலாம். அதிவேக இணைய வசதி உள்​ளிட்ட அனைத்து வசதி​களும் இங்கு இருக்​கும்.

எனவே தகவல் தொழில்​நுட்ப நிபுணர்​கள் தங்​கள் வீட்​டுக்கு அருகே அமைக்​கப்​படும் இந்த பணி நிலைய மையங்​களை பயன்​படுத்​திக் கொள்​ளலாம். மாநிலம் முழு​வதும் முக்​கிய நகரங்​களில் இந்த மையங்​கள் அமைக்​கப்​படும்.

கேரள மாநில டெக்​னோ​பார்க் மற்​றும் சைபர்​பார்க் உதவியுடன் இவை அமைக்​கப்​படு​கின்​றன. ஊரகப்பகுதியில் உள்​ளவர்​களின் திறமை​யை​யும், உலக அளவி​லான வேலை​வாய்ப்பு சந்​தர்ப்​பத்​தை​யும் இணைக்கும் பால​மாக இது செயல்​படும். விரை​வில் களமச்​சேரி, ராமானாட்டுக்கரா, தளிபரம்பா ஆகிய நகரங்களில் இது விரிவுபடுத்​தப்​படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கேரளாவில் வீட்டுக்கு அருகே பணி மையம் ஏற்படுத்த திட்டம்
தலைவர் தம்பி தலைமையில்: திரைப் பார்வை - ஒரு பகல்... ஓர் இரவு... நூறு கூத்துகள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in