இந்தியா
குடியரசு தின விழாவில் கேரள அமைச்சர் மயக்கம்
கன்னூர்: நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு கேரளாவில் நேற்று நடந்த விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் (மதச்சார்பற்ற) கட்சியின் தலைவரும், கேரள அமைச்சருமான காடனபள்ளி ராமச்சந்திரன் (82) மயக்கமடைந்தார்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ”கன்னூர் மைதானத்தில் குடியரசு தின விழாவுக்காக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ராமச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸ் மரியாதையை ஏற்றார். அப்போது நிகழ்ச்சி முடிவடையும் நேரத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்” என்றனர்.
