நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகளின் தண்டனையை நிறுத்தி வைக்க கேரளா உயர் நீதிமன்றம் மறுப்பு

கேரளா உயர் நீதிமன்றம்

கேரளா உயர் நீதிமன்றம்

Updated on
1 min read

கொச்சி: கேரளா​வில் நடிகை கடத்​தப்​பட்​டு, தாக்​கப்​பட்ட வழக்கில், குற்​றத்​தின் தீவிரத்​தைக் கருத்​தில் கொண்டு இரு குற்றவாளி​களின் 20 ஆண்டு சிறைத் தண்​டனையை நிறுத்திவைக்க கேரளா உயர்​ நீ​தி​மன்​றம் மறுத்​து​விட்​டது.

செஷன்ஸ் நீதி​மன்​றத் தீர்ப்​பில் எந்​தவொரு சட்டமீறலும் இல்லை எனக் கூறிய நீதிப​தி​கள், அவர்​களின் மேல்​முறை​யீட்டு மனுக்களைத் தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டனர். கடந்த 2017-ம் ஆண்டு பிப்​ர​வரி 17 அன்று திருச்​சூரில் இருந்து கொச்​சிக்கு காரில் சென்ற பிரபல நடிகை கடத்​தப்​பட்டு ஓடும் காரில் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட வழக்​கில், 20 ஆண்​டு​கள் சிறைத்​ தண்டனை விதிக்​கப்​பட்ட 5 மற்​றும் 6-வது குற்​ற​வாளி​களான சலீம் மற்​றும் பிரதீப் ஆகியோர் தங்​களின் மேல்​முறை​யீட்டு மனுக்​கள் நிலு​வை​யில் இருக்​கும் வரை தண்​டனையை நிறுத்திவைக்கக்கோரி கேரள உயர்​ நீ​தி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்தனர்.

இந்த மனுக்​களை விசா​ரித்த கேரளா உயர் ​நீ​தி​மன்ற நீதிப​தி​கள் ராஜா விஜய​ராகவன் மற்​றும் கே.​வி.ஜெயகு​மார் அடங்​கிய அமர்வு மனுக்​களை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டது. பொது நலன், சமூகத்​தில் இதன் தாக்​கம் மற்​றும் நீதித்​துறை மீதான மக்​களின் நம்​பிக்​கை​யைக் காக்க வேண்​டியதன் அவசி​யத்​தைச் சுட்டிக்காட்டிய நீதிப​தி​கள், குற்​றம் சாட்​டப்​பட்ட 6 பேரும் சேர்ந்து சதித் ​திட்​டம் தீட்டி அதைத் துல்​லிய​மாகச் செயல்​படுத்​தி​யதற்​கும், அதில் சலீ​மும், பிரதீப்​பும் ஒரே எண்​ணத்​தோடு உதவியதற்​கும் போது​மான ஆதா​ரங்​கள் முதற்​கட்​ட​மாக உள்​ளன.

மேலும், செஷன்ஸ் நீதி​மன்​றத்​தின் தீர்ப்​பில் எந்​தவொரு தெளிவான தவறோ அல்​லது சட்​டமீறலோ இருப்​பதை மனுதாரர்கள் சுட்​டிக்​காட்​டத் தவறி​விட்​ட​தால் தண்​டனையை நிறுத்தி வைக்க முடி​யாது என நீதி​மன்​றம் உத்​தர​வில் குறிப்பிட்டுள்​ளது.

4 பேர் விடுதலை: முன்​ன​தாக கடந்த ஜூலை 9 அன்று முதன்மை குற்​ற​வாளி​யான ‘பல்​சர் சுனி'​யின் தண்​டனையை நிறுத்தி வைக்க​வும் நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டது குறிப்​பிடத்​தக்​கது. இதே வழக்​கில் குற்​றம்சாட்​டப்​பட்​டிருந்த நடிகர் திலீப் உட்பட 4 பேரை செஷன்​ஸ் நீதி​மன்​றம் ஏற்​க​னவே விடு​தலை செய்​து​விட்​டது.

<div class="paragraphs"><p><em>கேரளா உயர் நீதிமன்றம்</em></p></div>
வினாத்தாள் கசிவு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று விவாதம்: செல்ஃபி வீடியோ மூலம் பிரதமர் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in