

இடுக்கி: கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி.சுதாகரன் 2 முறை அமைச்சராக பதவி வகித்தவர்.
தான் ஓரம் கட்டப்பட்டதாகக் கூறி கட்சி உறுப்பினர் பதவியை புதுப்பிக்க மறுத்துவிட்டு, அம்பலப்புழா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து மார்க்சிஸ்ட் வேட்பாளர் எச்.சலாம் போட்டியிடுகிறார்.
இதுகுறித்து ஜி.சுதாகரனை கேரள முதல்வர் பினராயி விமர்சனம் செய்தார். இதில் “பல்வேறு மலையாளச் சொற்களின் அர்த்தம் முதல்வருக்குத் தெரியவில்லை” என்று சுதாகரன் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக பினராயி நேற்று கூறுகையில், “நான் பயன்படுத்திய வார்த்தை, சுதாகரனை அவமதிக்கும் நோக்கில் கூறப்பட்டதல்ல. மாறாக, மார்க்சிய சித்தாந்தத்திற்கு சுதாகரன் இழைத்த துரோகத்தை சுட்டிக்காட்டும் வகையிலேயே பயன்படுத்தினேன்” என்றார்.