முஸ்லிம் மதகுரு கருத்துக்கு கேரள முதல்வர் கண்டனம்

முஸ்லிம் மதகுரு கருத்துக்கு கேரள முதல்வர் கண்டனம்
Updated on
1 min read

புதுடெல்லி: கேரள மாநிலம், கொச்​சி​யில் ஹுப்​புல் ரசூல் மாநாட்டில், சன்னி பிரிவு மதகுரு​வும், இந்​தி​யா​வின் கிராண்ட் முஃப்​தி​யு​மான காந்​த​புரம் ஏபி அபூபக்​கர் முஸ்​லி​யார் பேசும்​போது, “பெண்கள் தங்​களது வீடு​களுக்​குள் மட்​டுமே இருக்க வேண்​டும். அவர்​கள் பொது வெளிக்கு வரக்​கூ​டாது” என்​றார்.

இதுகுறித்து கேரள முதல்​வர் வி.டி.சதீசன் கூறிய​தாவது: பெண்​கள் வீட்​டிலேயே இருக்க வேண்​டும் என்ற அபூபக்​கரின் நிலைப்பாட்டை மாநில அரசு ஏற்​க​வில்​லை. இஸ்​லாம்​கூட, பெண்களை வீட்​டுக்​குள்​ளேயே கட்​டுப்​படுத்தி வைக்க வேண்​டும் என்று கூற​வில்​லை. வளர்ச்​சி​யடைந்து வரும் கேரளத்​துக்கு இது பொருத்​த​மான நிலைப்​பாடு அல்ல.

இது​போன்ற கருத்​துகளைத் தெரிவிக்​கும் அளவுக்கு இது 19-ம் நூற்றாண்டு அல்ல. சமூகத்​தின் பிர​தான நீரோட்​டத்​தில் பெண்களும் இணைந்து செயல்பட வேண்​டும். இது​தான் எங்​களது நிலைப்​பாடு. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

முஸ்லிம் மதகுரு கருத்துக்கு கேரள முதல்வர் கண்டனம்
மாற்று பேரவைத் தலைவராக செயலாற்றிய சத்யபாமா: ஜேசிடி பிரபாகர், தங்கம் தென்னரசு பாராட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in