ஆட்சி நிர்வாகத்தை டிஜிட்டல்மயமாக்க 5 சீர்திருத்தங்களுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல்

ஆட்சி நிர்வாகத்தை டிஜிட்டல்மயமாக்க 5 சீர்திருத்தங்களுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல்
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கேரள அமைச்​சரவை கூட்​டம் முதல்​வர் வி.டி.சதீசன் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் ஆட்சி நிர்​வாகத்தை டிஜிட்​டல்​மய​மாக்க 5 சீர்​திருத்​தங்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது.

இதன் முக்​கிய அம்​ச​மாக, ‘நிர்​வாகம், கண்​காணிப்பு மற்​றும் சீரமைப்​புக்​கான சிறப்​புச் சொத்து மேலாண்மை தளம்’ (சம்​பத்) தொடங்​கப்பட உள்​ளது. இது நிலம், கட்​டிடங்​கள், பாரம்​பரிய சின்னங்​கள், சாலைகள், அணை​கள், பாலங்​கள், வாக​னங்​கள் மற்றும் இயந்​திரங்​கள் உட்பட அரசுக்கு சொந்​த​மான அனைத்து சொத்​துக்​களின் பதிவு​களை​யும் பராமரிக்​கும் ஒரு மத்​திய டிஜிட்டல் பதிவே​டாகும்.

தற்​போதுள்ள ‘பிளான்​ஸ்​பேஸ்’ இணையதளத்தை ‘பிளான்​ஸ்​பேஸ் 2.0’ ஆக தரம் உயர்த்​த​வும் ஒப்புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது. இது அனைத்து அரசு மூலதனத் திட்டங்​களை​யும் டிஜிட்​டல் முறை​யில் கண்​காணிக்​கும்.

நிறு​வனங்​களின் திறனை உயர்த்த, ஆண்​டுக்கு சுமார் ரூ.19,000 கோடி சம்​பளச் செல​வினத்​தைக் கொண்ட சுமார் 591 அரசு நிறுவனங்​களை உள்​ளடக்​கிய ஒரு ஒருங்​கிணைந்த டிஜிட்​டல் பதிவேட்டை அரசு உரு​வாக்​கும். இதன் மூலம் தேவையற்ற பணிகள் தவிர்க்​கப்​படும்​.

ஆட்சி நிர்வாகத்தை டிஜிட்டல்மயமாக்க 5 சீர்திருத்தங்களுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல்
இ20 பெட்ரோல் பயன்பாடு வாகன இன்ஜினை பாதிக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை: மத்திய அரசு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in