வாராணசியில் நாளை மறுநாள் காசி தமிழ்ச் சங்கமம் 4.0: தமிழ் கற்பித்தல் உட்பட பல்வேறு அமர்வுகளுக்கு ஏற்பாடு

வாராணசியில் நாளை மறுநாள் காசி தமிழ்ச் சங்கமம் 4.0: தமிழ் கற்பித்தல் உட்பட பல்வேறு அமர்வுகளுக்கு ஏற்பாடு
Updated on
2 min read

புதுடெல்லி: மத்​திய கல்வி அமைச்​சகத்​தின் சார்​பில், காசி தமிழ்ச் சங்​கமம் 4.0 (கேடிஎஸ்) நிகழ்ச்சி நாளை மறு​தினம் தொடங்​கு​கிறது. இந்​நிகழ்ச்​சியை பனாரஸ் இந்து பல்​கலைக்​கழகம்​(பிஎச்​யூ) மற்​றும் சென்னை ஐஐடி​யும் இணைந்து நடத்​துகின்​றன.

காசி மற்​றும் தமிழகத்​தின் பண்​பாடு, ஆன்​மிகம் மற்​றும் வரலாற்​றுத் தொடர்​பு​களின் நிகழ்ச்​சிகளை அழகாகப் பிர​திபலிக்​கும் வகை​யில் இந்த சங்​கமம் நடத்​தப்​படு​கிறது. அதன் ஒரு பகு​தி​யாக, டிசம்​பர் 2 முதல் 15-ம் தேதி வரை பிஎச்​யூ, ஐஐடி இணைந்து பல்​வேறு தலைப்​பு​களில் கல்வி அமர்​வு​களை நடத்​துகின்​றன.

தமிழ் கற்​கலாம்: இதுகுறித்து நேற்று நடை​பெற்ற செய்​தி​யாளர் சந்​திப்​பில் பிஎச்யூ துணை வேந்​தர் பேராசிரியர் அஜித் குமார் சதுர்​வேதி கூறும்​போது, ‘‘கடந்த 2022-ல் முதலா​வது காசி தமிழ்ச் சங்​கமம் தொடங்​கியது. அதில் இருந்து பிஎச்​யூ​வின் பங்​களிப்பு பெருமை அளிக்​கிறது. உலகம் முழு​வதிலும் இருந்து மக்கள் அறிவைப் பெற​வும், தங்​கள் ஆன்​மிக நிலையை மேம்​படுத்​த​வும் காசிக்கு வரு​கின்​றனர். அதன் ஒரு பகு​தி​யாக பல்​வேறு வழிகளில் அறி​வுப் பரி​மாற்​றத்தை எளி​தாக்க ஒரு விரி​வான திட்​டத்தை பிஎச்யூ தயாரித்​துள்​ளது. இதன் கருப்​பொருளாக ‘தமிழ் கற்​கலாம்’ என்​பதை முன்​வைத்​துள்​ளோம். இந்த நிகழ்வு தேசிய நல்​லிணக்​கத்​துக்​கான ஒரு முக்​கியக் கரு​வி​யாகும். வடக்கு மற்​றும் தென் மாநிலங்​களை பொதுப் பாரம்​பரி​யத்​தின் மூலம் மீண்​டும் இணைக்க உதவு​கிறது’’ என்​றார்.

கேடிஎஸ் நிகழ்ச்​சிக்கு தமிழகத்​தில் இருந்து 7 குழு​வினர் வர உள்​ளனர். டிசம்​பர் 3 அன்று ‘தமிழ்ச் சிந்​தனை​யில் காசி: மகாகவி சுப்​பிரமணிய பாரதி மற்​றும் அவரது மரபுத் தொடர்ச்​சி’ எனும் தலைப்​பில் அமர்​வில் முதல் குழு​வின் மாணவர்​கள் பங்​கேற்​கின்​றனர்.

டிசம்​பர் 5-ல் ‘காசி மற்​றும் தமிழகத்​தின் ஆன்​மிக மற்​றும் தத்​து​வப் பாரம்​பரி​யம்’ எனும் அமர்​வில் 2-வது குழு​வின் ஆசிரியர்​கள் பங்​கேற்​கின்​றனர். மூன்​றாவது குழு​வில் வரும் எழுத்​தாளர்​கள் மற்​றும் பத்​திரி​கை​யாளர்​கள் டிசம்​பர் 7-ல் நடை​பெறும் ‘காசி​யின் ஒருங்​கிணைந்த இலக்​கி​யம் மற்​றும் பத்​திரி​கைத் துறை​யில் இந்​தி​யா’ என்ற அமர்​வில் பங்​கேற்க உள்​ளனர்.

டிசம்​பர் 9-ல் ‘நிலைத்த உணவுப் பாரம்​பரி​யம்’ என்ற தலைப்​பில் 4-வது குழு​வினர் விவ​சா​யம் மற்​றும் அதன் தொடர்​புடைய துறை​யினர் பங்​கேற்​கின்​றனர். டிசம்​பர் 11-ல் ‘புனித நூல்​கள்: காசி மற்​றும் காஞ்​சிபுரம் இடையி​லான உரை​யாடல்’ என்ற அமர்​வில் தொழில்​முனை​வோர் மற்​றும் கலைஞர்​கள் இடம்​பெறுகின்​றனர்.

வள​மான பெண்​கள்: டிசம்​பர் 13 அன்று நடை​பெறும் 6-வது குழு​வில் ‘வள​மான பெண்​கள், வளமை​யான இந்​தி​யா’ என்ற தலைப்​பில் பெண்​கள் கலந்​துரை​யாடல் நடத்​துகின்​றனர். இறு​தி​யான 7-வது குழு​வில், டிசம்​பர் 15 அன்று ‘தெய்​வீக இணைப்​பு’ என்ற தலைப்​பில் செவ்​வியல் இசைப் பாடகர்​கள், ஆன்​மிக நூல் ஆசிரியர்​கள் மற்​றும் பேச்​சாளர்​கள் பங்​கேற்​பர்.

இந்த ஆண்டு காசி தமிழ்ச் சங்​கமத்​தின் ஒரு சிறப்பு அம்​ச​மாக, தமிழ் மற்​றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் நிபுணத்​து​வம் பெற்ற தமிழ் ஆசிரியர்​கள் வாராணசி பள்​ளி​களில் தமிழ் கற்​பிக்க வரு​கின்​றனர். வாராணசி மாவட்ட நிர்​வாகத்​தின் ஒத்​துழைப்​புடன், பிஎச்​யூ​வின் இந்​திய மொழிகள் துறை​யின் தமிழ்ப் பிரிவு ஒருங்​கிணைக்​கிறது.

இதற்​காக சென்​னை​யில் உள்ள செம்​மொழித் தமிழாய்வு மத்​திய நிறு​வனம் தயாரித்த பாடப்​புத்​தகங்​களின் அடிப்​படை​யில் 50 ஆசிரியர்​கள் மற்​றும் 2 ஒருங்​கிணைப்​பாளர்​களுக்கு பயிற்​சி​யும் அளிக்​கப்​பட்​டு உள்​ளது. இந்​நிறு​வனத்​தின் 5 தொகுதி நூல்​கள் இந்தி வழி​யாக தமிழைக் கற்​பிக்க உதவ உள்​ளது. இவர்​கள் மாவட்ட நிர்​வாகம் தேர்ந்​தெடுத்த 50 அரசு மற்​றும் தனி​யார் பள்​ளி​களின் 1,500 மாணவர்​களுக்​கு 15 நாட்​கள்​ தமிழை கற்​றுத்​தர உள்​ளனர்​.

வாராணசியில் நாளை மறுநாள் காசி தமிழ்ச் சங்கமம் 4.0: தமிழ் கற்பித்தல் உட்பட பல்வேறு அமர்வுகளுக்கு ஏற்பாடு
“எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை” - சித்தராமையா, டி.கே.சிவகுமார் கூட்டாக பேட்டி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in