பெங்களூருவின் 50% கழிவு நீர் காவிரியில் கலக்கிறது: கர்நாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஒப்புதல்

பெங்களூருவின் 50% கழிவு நீர் காவிரியில் கலக்கிறது: கர்நாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஒப்புதல்
Updated on
1 min read

பெங்களூர: பெங்​களூரு மாநகரின் 50 சதவீத கழிவு நீர் சுத்​தி​கரிப்பு செய்​யப்​ப​டா​மல், காவிரி, தென்​பெண்ணை ஆகிய ஆறுகளில் கலந்து தமிழகத்​துக்கு செல்​வ​தாக கர்​நாடக சுற்​றுச்​சூழல் துறை அமைச்​சர் ராமலிங்க ரெட்டி தெரி​வித்​தார்.

கர்நாடக மாநிலம் பெங்​களூரு மாநகரின் கழிவு நீர் காவிரி, தென்​பெண்ணை ஆகிய ஆறுகளில் கலப்​ப​தாக, தமிழக அரசு பசுமை தீர்ப்​பா​யத்​தில் வழக்கு தொடர்ந்​து. இந்த வழக்​கு, அடுத்த வாரம் விசா​ரணைக்கு வரவிருக்​கும் நிலை​யில், கர்​நாடக சுற்​றுச்​சூழல் துறை அமைச்​சர் ராமலிங்க ரெட்டி பெங்​களூரு வடி​கால் வாரிய அதி​காரி​களு​டன் நேற்று ஆலோ​சனை மேற்​கொண்​டார்.

இந்த ஆலோ​சனை கூட்​டத்​துக்​குப் பின்​னர், ராமலிங்க ரெட்டி செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பெங்​களூரு மாநகரில் உள்ள கால்​வாய்​கள் வாயி​லாக தினசரி 2,825 எம்​எல்டி கழிவு நீர் வெளி​யேறுகிறது. இதில், 1,364.5 எம்​எல்டி கழிவு நீர், 37 சுத்​தி​கரிப்பு மையங்​கள் மூலம் சுத்​தி​கரிக்​கப்​படு​கிறது.

பின்​னர், சுத்​தி​கரிக்​கப்​பட்ட நீர் கோலார், சிக்​கப்​பள்​ளாப்​பூர், துமக்​கூரு ஆகிய அண்டை மாவட்​டங்​களின் விவ​சாய தேவை​களுக்கு கொண்டு செல்​லப்​படு​கிறது.

சுத்திகரிக்க நடவடிக்கை

மீத​முள்ள 47 சதவீத சுத்​தி​கரிப்பு செய்​யப்​ப​டாத கழிவு நீர் ரிஷ​பாவதி ஆற்​றில் கலந்து கனகபுரா அரு​கே​யுள்ள சங்​கமத்​தில் காவிரி ஆற்​றில் கலந்து தமிழகத்​துக்கு செல்​கிறது. அதே​போல், சுத்​தி​கரிக்​கப்​ப​டாத கழிவு நீர் தென்​பெண்ணை ஆற்​றில் கலந்து தமிழகத்​துக்கு செல்​கிறது.

தமிழகத்​துக்கு செல்​லும் சுத்​தி​கரிப்பு செய்​யப்​ப​டாத கழிவு நீரை சுத்​தி​கரிக்க நடவடிக்கை எடுத்து வரு​கிறோம். இதற்​காக, 43 சுத்​தி​கரிப்பு மையங்​களை புதி​தாக உரு​வாக்க இருக்​கிறோம். அதன்​மூலம், 1,174 எம்​எல்டி நீரை சுத்​தி​கரிக்க இயலும். பசுமை தீர்ப்​பா​யம் வெளி​யிட்​டுள்ள தர நிர்ணய அளவுடன் இந்த சுத்​தி​கரிப்பு மையங்​கள் இயங்க நடவடிக்கை எடுக்​கப்​படும்.

இவ்​வாறு அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரி​வித்​தார். காவிரி, தென்​பெண்ணை ஆகிய ஆறுகளில் கர்​நாடக அரசு கழிவு நீரை கலந்து வரு​வ​தாக தமிழக அரசும், விவ​சாய அமைப்​பு​களும் நீண்ட கால​மாக குற்​றம்​சாட்டி வந்​தன. இந்​நிலை​யில், கர்​நாடக அமைச்​சரே அதனை ஒப்​புக் கொள்​ளும் வகை​யில் தெரி​வித்​திருப்​பது சர்ச்​சையை ஏற்​படுத்​தி​ உள்​ளது.

பெங்களூருவின் 50% கழிவு நீர் காவிரியில் கலக்கிறது: கர்நாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஒப்புதல்
விருப்பம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடியதால் மனைவிக்கும் அவரது காதலனுக்கும் கணவனே நடத்தி வைத்த திருமணம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in