விருப்பம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடியதால் மனைவிக்கும் அவரது காதலனுக்கும் கணவனே நடத்தி வைத்த திருமணம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்​தில், காதலனுடன் ஓடிப்​போன மனை​வியைக் கண்​டு​பிடித்த கணவர், அவரது விருப்​பப்​படியே காதலனுக்கே முறைப்​படி திரு​மணம் செய்து வைத்த விசித்​திர​மான சம்​பவம் அரங்​கேறி​யுள்​ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள மாலிஹா​பாத் பகு​தி​யைச் சேர்ந்த பாது​காப்​புப் படை வீரர் ஒரு​வருக்​கும், அதே பகு​தி​யைச் சேர்ந்த பெண்​ணுக்​கும் கடந்த ஒரு வருடத்​துக்கு முன்பு திரு​மணம் நடை​பெற்​றது.

பெற்​றோரின் கட்​டா​யத்​தால் திரு​மணம் நடந்​த​தால், அப்​பெண் தன் பள்​ளிப் பருவ காதலனுடன் தொடர்ந்து தொடர்​பில் இருந்​துள்​ளார். இந்​நிலை​யில், கடந்த சில நாட்​களுக்கு முன்பு அப்​பெண் திடீரென கணவரின் வீட்டை விட்டு வெளி​யேறி, தனது காதலனுடன் ஹர்​தோய் பகு​திக்​குச் சென்​று​விட்​டார்.

மனை​வியைக் காண​வில்லை என கணவர் மற்​றும் குடும்​பத்​தினர் காவல் நிலை​யத்​தில் புகாரளித்​தனர். அதன்​பேரில், இரு​வரின் இருப்​பிடத்​தை​யும் கண்​டறிந்த காவல் துறை​யினர் அவர்​களை மீட்டு அழைத்து வந்​தனர். காவல் துறை​யினர் முன்​னிலை​யில் இரு வீட்​டாரும் நடத்​திய பேச்​சு​வார்த்​தை​யின்​போது, தன் கணவருடன் தொடர்ந்து வாழ விரும்​ப​வில்லை என்​றும், காதலனுடனேயே வாழ விரும்​புவ​தாக​வும் அந்​தப் பெண் தெரி​வித்​தார்.

மனை​வியைக் கட்​டாயப்​படுத்தி வாழ வைப்​ப​தில் அர்த்​தமில்லை என்​பதை உணர்ந்த கணவர், அவரது விருப்​பத்தை நிறைவேற்ற முடிவு செய்​தார். இதையடுத்​து, இரு​வீட்​டாரின் சம்​மதத்​துடன் அரு​கில் உள்ள கோயி​லில் அந்​தப் பெண்​னுக்​கும் அவரது காதலனுக்​கும் இந்து முறைப்​படி மாலை மாற்றி முறைப்​படி திரு​மணம் நடை​பெற்​றது.

திரு​மணம் முடிந்​ததும், கணவரே முன்​னின்று தன் மனை​வியை அவரது காதலனுடன் வாழ்த்தி வழி அனுப்பி வைத்​தார். கணவரின் இந்த விசித்​திர​மான முடிவு, அப்​பகுதி மக்​களிடையே பெரும்​ ஆச்​சரி​யத்​தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
குஜராத்தில் கடைகள், உணவு விடுதிகள் வணிக வளாகங்கள் 24 மணி நேரம் திறப்பு: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in