பெங்களூருவில் இந்தியாவின் முதல் ஏஐ பல்கலைக்கழகம்: கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே தகவல்

கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே

கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே

Updated on
1 min read

பெங்களூரு: “இந்​தி​யா​வின் முதல் அரசு சார்ந்த ஏஐ பல்கலைக்கழகம் பெங்​களூரு​வில் அமைக்​கப்​படும்” என்று கர்நாடக அமைச்​சர் பிரி​யங்க் கார்கே தெரி​வித்​தார்.

இதுகுறித்து கர்​நாடக தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பிரி​யங்க் கார்கே பெங்​களூரு​வில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

இந்​தி​யா​வின் தொழில்​நுட்​பத் தலைநக​ராக பெங்​களூரு விளங்​கு​கிறது. இந்​தி​யா​வின் மென்​பொருள் துறை வரு​மானத்​தில் 40 சதவீத பங்​களிப்​பைக் கர்​நாடக மாநிலம் மட்​டுமே வழங்​கு​கிறது.

பெங்​களூரு​வில் 17 ஆயிரத்​துக்​கும் அதி​க​மான புது​மை​யான தொழில் நிறு​வனங்​களும் உலகளா​விய திறன் மையங்​களும் உள்ளன. கர்​நாடக மாநிலம் முழு​வதும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த அறிவை இளைஞர்​களிடையே வளர்க்க திட்​ட​மிட்​டுள்​ளோம்.

இந்​தி​யா​வின் முதல் அரசு சார்ந்த செயற்கை நுண்​ணறிவு பல்​கலைக்​கழகத்தை பெங்​களூரு​வில் அமைக்க கர்​நாடக அரசு முடி​வெடுத்​துள்​ளது. இதற்​காக முதல்​வர் டி.கே.சிவகு​மார் கூகுள் நிறு​வனத்​துடன் ஆலோ​சனை நடத்​தி​யுள்​ளார். இந்த பல்​கலைக்​கழகத்​திற்​காகப் பெங்​களூரு​வில் இருந்து 30 கி.மீ. தொலை​வில் 5,800 ஏக்​கர் பரப்​பளவு நிலம் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது.

இதே போல பெங்​களூரு சர்​வ​தேச விமான நிலை​யத்​துக்கு அரு​கில் 9,600 ஏக்​கர் பரப்​பள​வில் செயற்கை நுண்​ணறிவு நகரம் அமைக்க முடி​வெடுக்​கப்​பட்​டுள்​ளது. அதற்கு ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு​களை ஈர்க்க அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

<div class="paragraphs"><p>கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே</p></div>
பிரதமர் நரேந்திர மோடியின் செல்ஃபி வீடியோ 30 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in