கர்நாடக காங். எம்எல்ஏ வெற்றி செல்லாது: பாஜக வேட்பாளர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

 சுப்பா ரெட்​டி​

சுப்பா ரெட்​டி​

Updated on
1 min read

பெங்களூரு: கடந்த 2023ம் ஆண்டு கர்​நாடக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் காங்​கிரஸ் எம்​எல்ஏ சுப்பா ரெட்​டி​யின் வெற்றி செல்லாது என அம்​மாநில உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

கடந்த 2023-ம் ஆண்டு கர்​நாடக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சிக்கபள்​ளாபுரா மாவட்​டம், பாகேபள்ளி தொகு​தி​யில் காங்​கிரஸ் வேட்​பாள​ராக சுப்பா ரெட்​டி​யும், பாஜக வேட்​பாள​ராக முனி​ராஜுவும் போட்​டி​யிட்​டனர். இதில் சுப்பா ரெட்டி வெற்றி பெற்​றார். இதற்கு எதி​ராக கர்​நாடக உயர் நீதி​மன்​றத்​தில் முனி​ராஜு வழக்கு தொடர்ந்​தார்.

அவர் தனது மனு​வில், “சுப்பா ரெட்டி தாக்​கல் செய்த‌ வேட்பு மனுவில் தவறான தகவல்​களை தெரி​வித்​துள்​ளார். அவர் தனக்கு சொந்​த​மான ரூ.1.3 கோடி சொத்​துகளை​யும், வாக​னங்​களை​யும் மறைத்​துள்​ளார். வாக்​குப் பதி​வின் ​போது முறை​கேட்​டில் ஈடு​பட்டு 19,179 வாக்​கு​களை பெற்​றுள்​ளார். அவரது வெற்​றியை செல்​லாது என அறிவிக்க வேண்​டும். தேர்​தலில் 2-வது இடம் பெற்ற என்னை வெற்​றி​யாள​ராக அறிவிக்க வேண்​டும்” என கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி எம்.ஜி.எஸ். கமல் நேற்று தீர்ப்பு வழங்​கி​னார். அதில்,”சுப்பா ரெட்டி வேட்பு மனு​வில் தெரிவித்த சொத்து மதிப்​புக்​கும் வரு​மான வரித்​துறை​யில் அவர் தாக்​கல் செய்த‌ கணக்​கிற்​கும் நிறைய வித்​தி​யாசங்​கள் உள்​ளன. அவரின் சொத்து மதிப்​பு, நகை​களின் மதிப்பு உள்​ளிட்​டவை தவறாக காட்டப்​பட்​டுள்​ளன.

பொய்​யான தகவல்​களை தெரி​வித்​த​தால் அவரது வெற்றி செல்லாது என அறிவிக்​கிறேன். சுப்பா ரெட்டி தேர்​தலில் முறைகேடு செய்து 19,179 வாக்​கு​களை பெற்​றார் என்ற குற்றச்சாட்டு தக்க ஆதாரங்​களு​டன் நிரூபிக்​கப்​பட​வில்​லை. எனவே முனிராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்க முடியாது” என்​று கூறியுள்​ளார்​.

<div class="paragraphs"><p> சுப்பா ரெட்​டி​</p></div>
அன்று அதிமுக... இன்று திமுக! - இன்னொரு பிளவுக்குத் தயாராகிறதா தமிழக காங்கிரஸ்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in