

பெங்களூரு: கர்நாடகாவின் கதக் மாவட்டம் ஷிரஹட்டி தொகுதி பாஜக எம்எல்ஏ டாக்டர் சந்துரு லமானி. இவர் கட்டிட ஒப்பந்ததாரர் விஜய் பூஜார் என்பவரிடம் நீர்ப் பாசன திட்டம் ஒன்றின் அனுமதியை பெற்று தருவதற்கு ரூ.11 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து விஜய் பூஜார் லோக் ஆயுக்தா போலீஸில் புகார் அளித்தார். அவர்கள் கூறிய அறிவுரையின்படி நேற்று பிற்பகல் 2 மணிக்கு விஜய் பூஜார், பாஜக எம்எல்ஏ சந்துரு லமானிக்கு சொந்தமான பாலாஜி மருத்துவமனையில் ரூ.5 லட்சம் பணத்தை வழங்கினார்.
அப்போது லோக் ஆயுக்தா போலீஸார் மருத்துவமனைக்குள் நுழைந்து அவர்களிடம் இருந்து பணத்தை கைப்பற்றினர். இதையடுத்து, சந்துரு லமானி, அவரது உதவியாளர்கள் மஞ்சுநாத் வால்மீகி, குரு நாயக் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.