நடிகர் நசிருதீன் ஷாவுக்கு கங்கனா ரனாவத் பதிலடி

நசிருதீன் ஷா, கங்கனா ரனாவத், பியூஷ் மிஷ்​ரா

நசிருதீன் ஷா, கங்கனா ரனாவத், பியூஷ் மிஷ்​ரா

Updated on
1 min read

புதுடெல்லி: ஜார்க்​கண்ட் மாநில அரசுப் பணி​யாளர் தேர்வாணையம் மற்​றும் தேர்வு வாரி​யம் நடத்​திய போட்​டித் தேர்வு​களில் முறை​கேடு நடந்​த​தாகக் கூறி அம்​மாநில மாணவர்கள் தீவிரப் போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.

இதுகுறித்து திரை​யுல​கப் பிரபலங்​கள் மவுன​மாக இருப்​ப​தாக மூத்த நடிகர் நசிருதீன் ஷா விமர்​சித்​தார். “வா​யில் எலும்​புத் துண்டு இருக்​கும் வரை நாய்கள் குரைக்​காது, அது கீழே விழும்​போது​தான் குரைக்​கத் தொடங்​கும்” என்று திரை​யுல​கினரை அவர் கடுமை​யாகச் சாடி​னார்.

தலைநகர் ராஞ்​சி​யில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரி​வித்த நடிகர் பியூஷ் மிஷ்​ரா, “இப்​போது எந்த ‘நாய்கள்’ வாயில் எலும்​புத் துண்டை கவ்விக்கொண்டு அமை​தி​யாக இருக்​கின்​றன?” என்று நசிருதீனுக்கு கேள்வி எழுப்பி​னார்.

நடிகர் பியூஷ் மிஷ்​ரா​வின் கருத்தை இன்​ஸ்​டாகி​ராமில் பகிர்ந்​துள்ள கங்​கனா ரனாவத், “எல்​லோரும் யாரோ ஒரு​வருக்கு நாயாகவே இருக்​கிறார்​கள். ஆனால் எனக்கு உணவளிக்​கும் தாய்​நாட்​டுக்கு உண்​மை​யுள்ள நாயாக இருப்​ப​தில் பெரு​மையடைகிறேன்” என்று குறிப்​பிட்​டிருந்​தார்.

மேலும் “நசிருதீன் இந்த நாட்​டின் உணவைச் சாப்​பிட்​டு​விட்​டு, பக்​கத்து நாட்​டுக்​காகப் போராடு​கிறார்” என்று கூறிய கங்​க​னா, அவரை ‘நரி’ என்றும் கடுமை​யாகச் சாடி​னார்.

<div class="paragraphs"><p>நசிருதீன் ஷா,&nbsp;கங்கனா ரனாவத்,&nbsp;பியூஷ் மிஷ்​ரா</p></div>
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது சிபிஐ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in