மேற்கு வங்கத்தில் நீதிபதிகள் சிறைபிடிப்பு விவகாரம்: 12 வழக்குப் பதிவு செய்தது என்ஐஏ

மேற்கு வங்கத்தில் நீதிபதிகள் சிறைபிடிப்பு விவகாரம்: 12 வழக்குப் பதிவு செய்தது என்ஐஏ
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்புத் திருத்​தப் பணிக்​காக (எஸ்​ஐஆர்) உச்​ச நீ​தி​மன்ற அறிவுறுத்​தலின்​படி பிற மாநிலங்​களில் இருந்து நீதித்​துறை அதிகாரி​கள் வரவழைக்​கப்​பட்​டிருந்​தனர்.

கடந்த ஏப்​ரல் 1ம் தேதி, மால்டா மாவட்​டத்​தின் காலி​யாசக் மற்​றும் மோதாபரி பகு​தி​களில் பணி​களில் ஈடு​பட்​டிருந்த 7 நீதித்​துறை அதி​காரி​களை சமூக விரோத கும்​பல் ஒன்று சுற்றி வளைத்து சிறைபிடித்​தது. இதில் மூன்று பெண் அதி​காரி​கள் மற்​றும் 5 வயது குழந்​தை​யும் அடங்​கு​வர். சுமார் 9 மணி நேரம் அவர்​கள் உணவு, நீரின்றி தவித்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இதையடுத்​து, இந்த விவ​காரத்தை தாமாக முன்​வந்து விசா​ரித்த உச்ச நீதி​மன்​றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலை​மையி​லான அமர்​வு, மேற்கு வங்க அரசின் செயல்​பாடு​களை கடுமை​யாகச் சாடியது. மேலும், அரசமைப்​புச் சட்​டத்​தின் 142-வது பிரி​வின் கீழ் வழங்​கப்​பட்​டுள்ள அதி​காரத்​தைப் பயன்​படுத்தி இந்த வழக்குகளை என்​ஐஏ-வுக்கு மாற்​றியது.

இந்நிலை​யில் என்​.ஐ.ஏ. வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “உச்ச நீதிமன்​றத்​தின் ஏப்​ரல் 6ம் தேதி உத்​தர​வின்​படி, மால்டா மாவட்டத்தின் மோதாபரி காவல் நிலை​யத்​தில் 7 வழக்​கு​களும், காலி​யாசக் காவல் நிலை​யத்​தில் 5 வழக்​கு​களும் என மொத்​தம் 12 எப்​ஐஆர் மீண்​டும் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன" என்​று தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் நீதிபதிகள் சிறைபிடிப்பு விவகாரம்: 12 வழக்குப் பதிவு செய்தது என்ஐஏ
மன்னார்குடி தொகுதி மக்களின் மனம் கவரப் போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in