‘‘இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட்டாக இருக்கும்’’ - கிரண் ரிஜிஜு நம்பிக்கை

‘‘இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட்டாக இருக்கும்’’ - கிரண் ரிஜிஜு நம்பிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு, ‘‘இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட்டாக இருக்கும். பிரதமரின் சீர்திருத்த விரைவு ரயில், வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி அதிவேகமாக முன்னேறும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ‘‘நம்பிக்கை வையுங்கள். கடந்த 11 ஆண்டுகளாக இந்த அரசாங்கம் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை நோக்கியே செயல்பட்டு வருகிறது. கடந்த 2014 முதல் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து பட்ஜெட்டுகளும் அந்த இலக்கை நோக்கிய படிகளாகவே இருந்துள்ளன. இந்த பட்ஜெட்டும் இந்தியாவை வளர்ச்சி அடைந்த இந்தியாவாக மாற்றுவதற்கான மற்றொரு படியாக இருக்கும்’’ என கூறியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் எம்பியுமான அகிலேஷ் யாதவ், ‘‘எந்த அரசாங்கத்திடம் எங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லையோ அந்த அரசாங்கம் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் இருந்து நாங்கள் என்ன எதிர்பார்க்க முடியும்? கடந்த சில பட்ஜெட்டுகள் 5% மக்களுக்காக மட்டுமே இருந்தது என்பதைப் பார்த்தோம். அரசாங்கம் தான் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளதா என்பதை மதிப்பிட வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

இன்று தாக்​கல் செய்யப்​பட உள்ள மத்திய பட்ஜெட்டில் பல்​வேறு முக்​கிய அறி​விப்​பு​கள் வெளி​யாகலாம் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. கடந்த முறை பட்​ஜெட்​டில் தனி​நபர் வரு​மான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்​ச​மாக உயர்த்​தப்​பட்​டது. நிலைக்​கழிவு ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக அதி​கரிக்​கப்​பட்​டது. இதன்​படி, ஓராண்டு வரு​மானம் ரூ.12.75 லட்​சம் வரை இருந்​தால் வரு​மான வரி செலுத்த தேவை​யில்​லை. இன்​றைய பட்​ஜெட்​டில் நிலைக்​கழிவு ரூ.75,000-ல் இருந்து ரூ.1 லட்​ச​மாக அதி​கரிக்​கப்பட வாய்ப்பு உள்​ளது.

குறு, சிறு விவ​சா​யிகளுக்கான ஆண்டு நிதி​யுதவி ரூ.6,000-ல் இருந்து ரூ.9,000 ஆக அதிகரிக்​கப்பட வாய்ப்பு இருக்​கிறது. மத்​திய அரசின் ‘பிஎம் சூர்ய கர்’ மானி​யத் திட்​டத்​தின்​ கீழ் வீடுகளில் சோலார் பேனல் அமைப்​ப​தற்​கான மானிய உதவி, மத்​திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்​து​வக் காப்​பீடு வரம்பு ஆகியவை​யும் உயர்த்தப்பட வாய்ப்பு உள்​ளது. தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரிப்பதால், அவற்றின் மீதான சுங்க வரி குறைக்​கப்பட வாய்ப்பு உள்​ளது.

2017 முதல் மத்​திய பட்​ஜெட்​டுடன் இணைத்தே ரயில்வே பட்​ஜெட்​டும் தாக்​கல் செய்​யப்​படு​கிறது. அந்த வகை​யில், அம்ரித் பாரத், வந்தே பாரத் உட்பட 300-க்​கும் மேற்​பட்ட புதிய ரயில்​கள் குறித்த அறி​விப்​பும்​ வெளியாகும்​ என்று எதிர்​பார்க்கப்படுகிறது.

‘‘இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட்டாக இருக்கும்’’ - கிரண் ரிஜிஜு நம்பிக்கை
அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோளை ஏற்று இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நிறுத்தம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in