இந்தியாவில் இஸ்லாமியர்கள் இருக்கக் கூடாது என நினைப்பவர் இந்துவே அல்ல: ஆர்எஸ்எஸ் தலைவர்

அமெரிக்காவில் மோகன் பாகவத் பேச்சு
இந்தியாவில் இஸ்லாமியர்கள் இருக்கக் கூடாது என நினைப்பவர் இந்துவே அல்ல: ஆர்எஸ்எஸ் தலைவர்
Updated on
1 min read

நியூயார்க்: இந்தியா​வில் இஸ்​லாமியர்​கள் இருக்​கக் கூடாது என்று கருதும் எந்​தவொரு நபரும் உண்​மை​யான இந்​து​வாக இருக்க முடியாது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்​ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்​பின் நூற்​றாண்டு விழாவை முன்​னிட்டு அமெரிக்​கா, கனடா உள்​ளிட்ட நாடு​களுக்​குப் பயணம் மேற்​கொண்​டுள்ள அந்த அமைப்​பின் தலை​வர் மோகன் பாகவத், நியூயார்க்​கில் நடை​பெற்ற ‘ஒரே உலகம், ஒரே மனிதநே​யம்’ என்ற மதத் தலை​வர்​கள் மாநாட்​டில் உரை​யாற்​றி​னார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: உங்​களை நீங்​கள் இந்து என்று சொல்​லிக்​கொண்​டால், அனைத்து வழிகளும் ஒரே இலக்கை நோக்​கியே செல்​கின்றன என்​பதை நீங்​கள் நம்ப வேண்​டும். ஒவ்வொரு மனிதனுக்​கும் கண்​ணி​ய​மும் சுயமரி​யாதை​யும் உண்டு; நம்​மிடையே எந்​தவொரு அடிப்​படை வேறு​பாடும் இல்லை.

இந்தியாவில் இஸ்​லாமியர்​கள் இருக்​கக் கூடாது என்று எந்​தவொரு இந்​து​வாவது நினைத்​தால், அவர் இந்​து​வாகவே இருக்க முடி​யாது. அனை​வரை​யும் சமமாக ஏற்​றுக்​கொள்​வதும், வேற்​றுமை​யில் ஒற்றுமை​யைக் காண்​பதுமே இந்​துத்​து​வத்​தின் அடிப்​படைக் கொள்​கை​யாகும். ‘நான்’, ‘என்​னுடையது’ என்​ப​தில் தீர்வு இல்​லை; ‘நாம்’, ‘நம்​முடையது’ என்​பதே உண்​மை​யான தீர்​வு.

மேலும், பன்​முகத்​தன்மை என்​பது இயற்கை விதி, ஆர்எஸ்எஸ் தொண்​டர்​கள் எவ்​வித மதப் பாகு​பாடுமின்றி அனை​வருக்​கும் சேவை செய்து வரு​கின்​றனர். மதங்​கள் வேறாக இருந்​தா​லும் மனிதநே​யம் ஒன்​று​தான். இவ்​வாறு அவர் பேசி​னார். நியூயார்க்கின் வரலாற்​றுச் சிறப்​புமிக்க மேடிசன் சதுக்க அரங்கத்தில் நடை​பெறவுள்ள பெரும் மக்​கள் கூட்​டத்​துக்கு முன்னதாக நடை​பெற்ற இந்த நிகழ்​வில் மோகன் பாகவத் ஆற்றிய உரை சர்​வ​தேச அளவில் கவனத்​தைப் பெற்​றுள்​ளது.

மோகன் பாகவத் நியூ​யார்க்​கில் உள்ள இஸ்​கான் கோயிலுக்​கும், பக்தி மையத்​திற்​கும் சென்​றார். அங்கு வீடற்ற மக்​களுக்கு உணவு வழங்​கிப் பேசிய அவர், உலகில் உள்ள சண்​டைகளுக்​கும் பிரி​வினை​களுக்​கும் கிருஷ்ண பக்தி வழி​யில் தீர்வு காணலாம்​ என்​று கூறி​னார்​.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் இருக்கக் கூடாது என நினைப்பவர் இந்துவே அல்ல: ஆர்எஸ்எஸ் தலைவர்
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பாயும் புலியாக மாறி வருகிறது: அமைச்சர் விஸ்வநாதன் கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in