

திருமலை: திருமலையில் நேற்று காலை விஐபி பிரேக் நேரத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அப்போது, நாளை ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ள பிஎஸ்எல்வி - சி62 விண்கலத்தின் மாதிரியை ஏழுமலையானின் பாதங்களில் வைத்து சிறப்பு பூஜை செய்தார்.
இக்குழுவினருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் தீர்த்த பிரசாதம் வழங்கி கவுரவித்தனர். சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நாளை 10.17 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ள இந்த விண்கலத்துடன் பூமியை ஆய்வு செய்ய இஓஎஸ் - என் - 1 துணை விண்கலத்தை அனுப்ப உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.