

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைகள், கருவறை கதவுகளில் பூசப்பட்டிருந்த 4.5 கிலோ தங்கம் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக ஐயப்பன் கோயில் முன்னாள் அர்ச்சகர் உன்னிகிருஷ்ணன் போத்தி, தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக ஐயப்பன் கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரு நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நேற்று காலை நெஞ்சு வலி ஏற்பட்டதால் திருவனந்தபுரம் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.