சட்டவிரோத இணையதளங்களில் உடல் உறுப்பு விற்பனை விளம்பரம் வியாபாரமா அல்லது மோசடியா?

சட்டவிரோத இணையதளங்களில் உடல் உறுப்பு விற்பனை விளம்பரம் வியாபாரமா அல்லது மோசடியா?
Updated on
1 min read

புதுடெல்லி: ஆன்லைன் வர்த்தக தளங்களில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது போல், டார்க் வெப் எனப்படும் சட்டவிரோத இணையதளங்களில் உடல் உறப்புகள் விற்பனைக்கு என விளம்பரம் செய்யப்படுகிறது.

இந்த சட்டவிரோத இணை யதளங் களுக்குள் கூகுள் குரோம் போன்ற சாதாரண பிர வுசர்கள் மூலம் செல்ல முடியாது. இவற்றிற்கு 'டோர்' (Tor) பிரவுசர் போன்ற சிறப்பு மென் பொருள்கள் தேவைப்படுகின் றன. இதன் மூலமாக ரகசிய இணையதளங்களுக்குள் சென்றால் அங்கு மனித உறப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

சிறுநீரகம் 85,000 டாலர், இதயம் 69,000 டாலர், கல்லீரல் 35,000 டாலர் என விளம்பரம் செய்யப்படுகிறது. இந்தியா மற்றறும் ஐரோப்பிய நாடுகளில் உடல் உறுப்புகள் 2 நாளில் அனுப்பப்படும் அல்லது நன்கொடையாளர் அனுப்பப்படுவார் என உறுதியளிக்கப்படுகிறது.

இந்த விற்பனையாளர்களை தொடர்பு கொண்டால், தகவல் தொடர்புக்கு டெலிகிராம் செயலியை பயன்படுத்துகின்றனர். 2000 டாலர் மதிப்பில் பிட்காயின் டெபாசிட் செய்தால், எந்த மருத்துவமனையை தொடர்பு கொள்ள வேண்டும்.

எந்த மருத்துவரை எப்போது தொடர்பு கொள்ள வேண்டும் என்ற விவரங்கள் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் கடுமையான சட்டங்கள், கட்டுப்பாடுகள் மற்றம் நீண்ட காலம் காத்திருப்பு ஆகியவை இந்தியாவில் உள்ள நிலையில் உடல் உறுப்புகள் விற்பனை விளம்பரம் வெளியிடப்படுகிறது. இது உடல் உறப்பு அவசரமாக தேவைப்படுபவர்களை குறிவைத்து நடைபெறும் சட்டவிரோத வியாபாரமா அல்லது மோசடியா என கண்டறிய முடியவில்லை.

சட்டவிரோத இணையதளங்களில் உடல் உறுப்பு விற்பனை விளம்பரம் வியாபாரமா அல்லது மோசடியா?
இந்தியாவில் ஜூலையில் மழை குறையும்: ‘எல் நினோ’ பாதிப்பே காரணம் என ஐஎம்டி கணிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in