ஐஆர்எஸ் அதிகாரி மகள் கொலை வழக்கு: போலீஸ், நீதிமன்றத்தில் மாற்றி மாற்றி பேசும் வேலைக்கார இளைஞர்

ஐஆர்எஸ் அதிகாரி மகள் கொலை வழக்கு: போலீஸ், நீதிமன்றத்தில் மாற்றி மாற்றி பேசும் வேலைக்கார இளைஞர்
Updated on
2 min read

புதுடெல்லி: தென்​கிழக்கு டெல்​லி​யின் கைலாஷ் ஹில்ஸ் பகு​தி​யில் வசித்து வரும் இந்​திய வரு​வாய் அதி​காரி​யின் 22 வயது மகள் அண்​மை​யில், பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்டு கொலை செய்​யப்​பட்​டார்.

இந்​நிலை​யில் போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்தி குற்​ற​வாளியைக் கைது செய்​துள்​ளளனர். அவரது பெயர் ராகுல் மீனா என்று தெரிய வந்​துள்​ளது. அவரிடம் விசா​ரணை நடை​பெற்று வரும் நிலை​யில், அவர் தன்​னுடைய குற்​றங்​களுக்​காக வருந்​த​வில்லை என்​றும், விசா​ரணை​யின் போது வாக்​குமூலத்தை அவ்​வப்​போது மாற்​றிக் கொண்டு வரு​வ​தாக​வும் போலீ​ஸார் தெரி​வித்​தனர். போலீ​ஸாரிட​மும், நீதி​மன்​றத்​தி​லும் அடிக்​கடி மாற்றி மாற்றி வாக்​குமூலத்தை கூறி வரு​கிறார்.

நீதி​மன்​றத்​தில் அவர் ஆஜர்​படுத்​தப்​பட்ட போது அவர் தன்​னுடைய பேசும்​பாணியை அவ்​வப்​போது மாற்​றிக் கொண்டு நீதிபதி முன் பேசி​யிருப்​பதும் தெரிய வந்​துள்​ளது. நான் குற்​றம் செய்​து​விட்​டேன், தவறு​தான் என்று நீதிப​தி​யிடம் ராகுல் கூறியதைத் தொடர்ந்​து, அவரை 4 நாட்​கள் போலீஸ் காவலில் எடுத்து விசா​ரிக்க நீதிபதி உத்​தர​விட்​டுள்​ளார்.

நீதிப​தி, குற்​றத்தை நீங்​கள் ஒப்​புக் கொள்​கிறீர்​களா என்று கேட்​டதற்​கு, இது என்​னுடைய வாக்​குமூல​மாக நான் கருத​வில்லை என்று தெரி​வித்​திருக்​கிறார். போலீ​ஸாரிடம் ஒரு மாதிரி​யாக​வும், நீதி​மன்​றத்​தில் ஒரு மாதிரி​யாக​வும் ராகுல் பேசி​யுள்​ளார். இவ்​வாறு அவர் மாற்றி மாற்றி பேசி வரு​வது போலீ​ஸாருக்கு குழப்​பத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

குற்​றம் நடந்த வீட்​டில், ராகுல் 8 மாதங்​கள் வேலை செய்​துள்​ளார். பண விவ​காரத்​தில் அவர் ஏதோ முறை​கேடு செய்​திருந்​த​தால் ஒரு மாதத்​துக்கு முன்பு அவரை வேலையை விட்டு துரத்​தி​யுள்​ளனர். ஆனால், அவருக்கு அந்த வீட்​டின் அனைத்து விஷ​யங்​களும் அத்​துப்​படி​யாக இருந்​துள்​ளன. வீட்​டுக்​குள் செல்​லும் வழி, பயோ-மெட்​ரிக் லாக்​கர், கண்​காணிப்பு கேமரா வசதி போன்ற விஷ​யங்​களை அவர் நன்​றாக அறிந்து வைத்​துள்​ளார்.

இந்த குற்​றத்​தில் ஈடு​படு​வதற்கு முன்​பு, ராஜஸ்​தானின் ஆல்​வார் பகு​தி​யில் தனது நண்​பரின் மனை​வியை பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார்.

இந்​நிலை​யில் போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், ராகுல் பாலியல் தொழிலா​ளி​களுக்​காக ஏராள​மான பணத்தை செலவு செய்​தது தெரிய வந்​துள்​ளது. மேலும், ஐஆர்​எஸ் அதி​காரி​யின் வீட்​டுக்​குள் நுழைந்து அவரது மகளிடம் பணம் கேட்ட போது அவர் தரவில்​லை​யென்​றும், அதனால்​தான் குற்​றத்​தைச் செய்​த​தாக​வும் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக ராகுல் மீனா மேலும் கூறும்​போது, “ஐஆர்​எஸ் அதி​காரி வீட்​டில் பணம், நகையை திருடத்​தான் வந்​தேன். எனக்கு அதிக பணம் தேவை​யாக இருந்​தது. ஐஆர்எஸ் அதிகாரியின் மகளை கொலை செய்ய நினைக்​க​வில்​லை. ஆனால், அது நடந்​து​விட்​டது. எப்​படி​யா​வது பணத்தை புரட்ட வேண்​டிய தேவை இருந்​தது’’ என்​றார்.

இதுகுறித்து போலீஸ் அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, “அதிக பாது​காப்பு நிறைந்த குடி​யிருப்​பில் அந்த ஐஆர்​எஸ் அதி​காரி வசித்து வரு​கிறார். வீட்​டுக்கு ராகுல் வரு​வது கண்​காணிப்பு கேம​ரா​வில் பதி​வாகி​யுள்​ளது. பணத்தை எடுப்​ப​தற்கு முன்பு அந்த பெண்ணை அடித்து காயப்​படுத்​தி​யுள்​ளார். பின்​னர் கீழே விழுந்​ததும், அவரை பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார். பின்​னர் அந்தப் பெண்​ணின் கைரேகை​யை, பயோ மெட்​ரிக் லாக்​கரில் வைத்து விட்டு வெளி​யேறி​யுள்​ளார். செல்​போன் பேசுவது போல பேசிக் கொண்டே தப்​பியோடி​விட்​டார்’’ என்​றார்​.

ஐஆர்எஸ் அதிகாரி மகள் கொலை வழக்கு: போலீஸ், நீதிமன்றத்தில் மாற்றி மாற்றி பேசும் வேலைக்கார இளைஞர்
வெளிநாடு செல்ல அனுமதி கோரிய இந்திராணி முகர்ஜி மனு நிராகரிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in