வெளிநாடு செல்ல அனுமதி கோரிய இந்திராணி முகர்ஜி மனு நிராகரிப்பு

வெளிநாடு செல்ல அனுமதி கோரிய இந்திராணி முகர்ஜி மனு நிராகரிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: பிரபல தனி​யார் தொலைக்​காட்​சி​யில் தலை​மைப் பொறுப்பு வகித்த பீட்​டர் முகர்​ஜி​யின் மனைவி இந்​தி​ராணி முகர்ஜி. மகா​ராஷ்டி​ராவைச் சேர்ந்த இவர் தனது முன்​னாள் கணவர் மூலம் தனக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்​த​தாக 2015-ம் ஆண்டு மும்பை போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்​டார்.

பீட்​டர் முகர்​ஜிக்கு அவரது முன்​னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை, ஷீனா முறை தவறி காதலித்​த​தால் இந்​தக் கொலை நடந்​த​தாக கூறப்​படு​கிறது. இந்த வழக்​கில் இந்​தி​ராணி உள்​ளிட்​டோர் கைது செய்​யப்​பட்டு மும்பை சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளனர். இந்த வழக்​கில் இவர்​களுக்கு 2022-ல் ஜாமீன் வழங்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், வெளி​நாடு செல்ல அனு​மதி கேட்டு இந்​தி​ராணி முகர்​ஜி, உச்ச நீதி​மன்​றத்​தில் அண்​மை​யில் மனு தாக்​கல் செய்​தார்.

இந்த மனு நீதிப​தி​கள் எம்​.எம்​.சுந்​தரேஷ், என்​.கோட்​டீஸ்​வர் சிங் ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. மனுவை விசா​ரித்த நீதிப​தி​கள், இந்​தி​ராணி முகர்​ஜி​யின் கோரிக்​கையை ஏற்க மறுத்து மனுவை நிராகரித்​தனர். மேலும், வழக்கு விசா​ரணை​யை, விசா​ரணை நீதி​மன்​றத்​தில் நடத்​து​வது தொடர்​பான மனுவை இந்​தி​ராணி முகர்ஜி தாக்​கல் செய்​ய​ வேண்​டும் என்​றும் அந்த விசா​ரணையை உச்ச நீதி​மன்​றம் நடத்​தாது என்​றும் நீதிப​தி​கள் தெரி​வித்​தனர்.

வெளிநாடு செல்ல அனுமதி கோரிய இந்திராணி முகர்ஜி மனு நிராகரிப்பு
தொழுகைக்கு பெண்கள் மசூதிகளுக்கு செல்ல தடையில்லை: முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in