ரயில்களில் ‘ஹலால்’ அசைவ உணவு விநியோகம்: பதில் அளிக்க ரயில்வே துறைக்கு நோட்டீஸ்

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

புதுடெல்லி: ‘ஹலால் உணவு’ என்​ப​தற்கு இஸ்​லாமிய சட்​டப்​படி அனு​ம​திக்​கப்​பட்ட உணவு என்ற பொருள் ஆகும்.

இந்​நிலை​யில் ரயில்​களில் முஸ்​லிம்​களுக்​கான ஹலால் முறையி​லான இறைச்​சியை மட்​டுமே இந்​தி​யன் ரயில்வே வழங்​கு​வ​தாக மத்​திய பிரதேசம், போபாலை சேர்ந்த சுனில் அஹிர்​வார் என்​பவர் தேசிய மனித உரிமை ஆணை​யத்​திடம் புகார் அளித்​தார்.

அவர் தனது புகாரில், இது நியாயமற்ற பாகு​பாட்டை உரு​வாக்​கு​வதாக கூறி​யிருந்​தார். இப்​பு​கார், 1993-ம் ஆண்டு மனித உரிமை​கள் பாது​காப்பு சட்​டத்​தின் பிரிவு 12-ன் கீழ் விசா​ரணைக்கு ஏற்​கப்​பட்​டது. புகாரை ஆணை​யத்​தின் உறுப்​பினர் பிரி​யங்க் கனூங்கோ தலை​மையி​லான அமர்​வு, கடந்த நவம்​பர் 24-ம் விசா​ரித்​தது. இதையடுத்து ரயில்வே துறைக்கு ஆணை​யம் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது.

இந்​நிலை​யில் ரயில்​களில் ‘ஹலால்' சான்​றளிக்​கப்​பட்ட உணவு மட்​டுமே வழங்​கப்​பட வேண்​டும் என்​ப​தற்கு அதி​காரப்​பூர்வ உத்​தரவு அல்​லது விதி​முறை​கள் எது​வும் இல்லை என்று ரயில்வே வாரி​யம் பதில் அளித்​துள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியிடங்களை நிரப்ப பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in