

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் முக்கியத்துவம் வாய்ந்த பல பதவிகள் காலியாக உள்ள நிலையில், அப்பணிகளை கைப்பற்ற ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்கள் துடிக்கின்றனர்.
கலந்தாய்வு நடத்தப்பட்ட பணிகளுக்கும் இடமாறுதல் ஆணை வழங்கப்படாததற்கும் இது தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. தேசிய மருத்துவ ஆணையத்திடம் பெற்ற காலக்கெடுவுக்குள் காலியிடங்கள் நிரப்படவில்லை என்றால், அரசு மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் நிலை உருவாகும். எனவே, பேராசிரியர்களுக்கு உடனடியாக பணியிட மாறுதல் ஆணையை வழங்க வேண்டும். இவ்வாறு அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.