திருமலைக்கு வந்தபோது இயற்கையாக உயிரிழந்த பக்தர்களுக்கு தலா ரூ.2 லட்சம் காப்பீடு வழங்கல்

திருமலைக்கு வந்தபோது இயற்கையாக உயிரிழந்த  பக்தர்களுக்கு தலா ரூ.2 லட்சம் காப்பீடு வழங்கல்
Updated on: 
1 min read

திருமலை: திருப்பதி ஏழு​மலை​யான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இயற்​கை​யாக மரணம் எய்​தினால், அவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்​சம் காப்​பீடு தொகை வழங்​கும் திட்டம், நாட்​டிலேயே முதன் முறை​யாக நேற்று திருமலை​யில் அமல்​படுத்​தப்​பட்​டது.

திருப்​பதி ஏழு​மலை​யானை தரி​சிக்க திரு​மலைக்கு வரும் பக்தர்கள் இயற்​கை​யாக மரணம் எய்​தினால் அவர்​களுக்கு எல்ஐசி காப்​பீடு திட்​டத்​தின் மூலம் ரூ.2 லட்​சம், பக்​தர்​கள் சாலை விபத்​தில் உயி​ரிழந்​தால் அவர்​களின் குடும்​பத்​துக்கு ரூ.10 லட்​சம் காப்​பீடு வழங்​கப்​படும் என, கடந்த செப். 9-ம் தேதி திருப்​பதி தேவஸ்தானம் அறி​வித்​தது. இந்த திட்​டத்​துக்கு ‘ஸ்ரீவாரி யாத்ர சுரக் ஷா’ திட்​டம் என பெயரிடப்​பட்​டது.

இந்​நிலை​யில், திரு​மலை​யில் இத்​திட்​டத்​தின்​படி, கடந்த 2 மாதங்களில் சுவாமி தரிசனத்​துக்கு வந்து இயற்​கை​யாக மரணம் எய்​திய 17 பேரில், முதற்​கட்​ட​மாக 7 பேரின் குடும்​பத்​தா​ருக்கு தலா ரூ.2 லட்​சத்​துக்​கான காப்​பீடு தொகையை திரு​மலை திருப்பதி தேவஸ்தான நிர்​வாக அதி​காரி எம். ரவிசந்​திரா, கூடுதல் நிர்​வாக அதி​காரி வெங்​கைய்ய சவுத்ரி ஆகியோர் நேற்று வழங்கினர்.

இந்​நிகழ்ச்​சி​யில், நிர்​வாக அதி​காரி எம். ரவிசந்​திரா பேசியதாவது, “ஸ்ரீவாரி யாத்ர சுரக் ஷா திட்​டத்​தின் கீழ், நாட்டிலேயே முதன்​முறை​யாக திரு​மலைக்கு வரும் பக்​தர்​களுக்கு காப்​பீடு தொகை வழங்​கும் திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது.

ஆன்​லைனில் முன்​ப​திவு செய்​திருந்​தா​லும், அல்​லது சர்வ தரிசனம் மூலம் நேரடி​யாக வந்து சுவாமியை தரி​சிக்க வரும் பக்தர்​களுக்கு மரணம் ஏற்​பட்​டாலும் திருப்​பதி தேவஸ்தானம் எல்​ஐசி​யுடன் இணைந்து இந்த காப்​பீடு தொகையை வழங்​கும். இத்​திட்​டம், திருப்​பதி தேவஸ்தானம் தரப்​பில் வந்து பக்​தர்​களுக்கு இல​வச சேவை செய்​யும் ஸ்ரீவாரி சேவகர்​களுக்​கும் பொருந்​தும்” என்​றார்.

நாட்​டுக்கே முன்​னோடி​

கூடுதல் நிர்​வாக அதி​காரி வெங்​கைய்ய சவுத்ரி பேசும்​போது, “கடந்த ஒன்​றரை ஆண்​டுகளாக இத்​திட்​டம் குறித்து ஆலோ​சனை நடத்தி அமல் படுத்தி உள்​ளோம். இதன்​மூலம், நாட்​டுக்கே முன்னோடி​யாக திருப்​பதி தேவஸ்தானம் திகழ்​கிறது” என்​றார்.

திருமலைக்கு வந்தபோது இயற்கையாக உயிரிழந்த  பக்தர்களுக்கு தலா ரூ.2 லட்சம் காப்பீடு வழங்கல்
திருப்​பரங்​குன்​றம் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்​பும்

X