நீர்மூழ்கிகளை அழிக்கும் போர்க் கப்பல் ‘ஐஎன்எஸ் மால்வன்’ கடற்படையிடம் ஒப்படைப்பு

நீர்மூழ்கிகளை அழிக்கும் போர்க் கப்பல் ‘ஐஎன்எஸ் மால்வன்’ கடற்படையிடம் ஒப்படைப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட ஐஎன்​எஸ் மால்​வன் என்ற போர்க்​கப்​பல், இந்​திய கடற்​படை​யிடம் ஒப்படைக்கப்பட்டுள்​ளது. இது எதிரி நாட்​டின் நீர்​மூழ்கி கப்பல்களை அழிக்​கும் திறன் படைத்​தது.

தற்​சார்பு இந்​தியா திட்​டத்​தின் கீழ், இந்​திய கடற்​படைக்கு நவீன வசதி​களு​டன் கூடிய 8 சிறப்பு போர்க்​கப்​பல்​கள் தாயாரிக்க கொச்சின் ஷிப்​யார்டு நிறு​வனத்​துடன் ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டது. இந்த கப்​பல்​கள் எதிரி நாட்டு நீர்​மூழ்கி கப்​பல்​களை கண்​டு​பிடித்து டார்​பிடோ குண்டு மூலம் அழிக்​கும் திறன் வாய்ந்​தவை மற்​றும் ஆழம் குறைந்த கடலோர பகு​தி​யில் பயணிக்​கும் திறன் படைத்​தவை.

கொச்​சின் ஷிப்​யார்டு நிறு​வனம் தயாரித்த ஐஎன்​எஸ் மால்​வன் என்ற போர்க்​கப்​பல் கடற்​படை​யிடம் நேற்று முன்​தினம் ஒப்படைக்​கப்​பட்​டது. உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட இந்த போர்க்​கப்​பலில் 80 சதவீதத்​துக்​கும் மேல் உள்​நாட்டு தயாரிப்பு பொருட்கள் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளன. 80 மீட்​டர் நீளம் உள்ள இந்த கப்​பல் 1100 டன் எடை கொண்​டது.

வாட்​டர் ​ஜெட் இயந்​திரம் மூலம் இந்த கப்​பல் இயங்​கும். இதில் டார்பிடோ குண்​டு​கள், நீர்​மூழ்கி கப்​பலை தாக்கி அழிக்​கும் ராக்கெட் குண்​டு​கள், எதிரி ​நாட்டு நீர்​மூழ்கி கப்​பல்​களை கண்காணிக்​கும் நவீன சென்​சார்​கள்​, ரேடார்​கள்​, சோனார்​ கருவிகள்​ உள்​ளன.

நீர்மூழ்கிகளை அழிக்கும் போர்க் கப்பல் ‘ஐஎன்எஸ் மால்வன்’ கடற்படையிடம் ஒப்படைப்பு
சுந்தர்.சி என்ட்ரி... பிடிஆருக்கு டஃப்? - மதுரை மத்திய தொகுதி களம் எப்படி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in