ஜம்மு காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி செக்​டார் எல்​லைக் கட்டுப்பாட்டு கோட்​டுப் பகு​தி​யில் நேற்று முன்​தினம் இரவு பாகிஸ்தான் துப்​பாக்​கிச் சூடு நடத்தியது. இந்​திய எல்​லைக்​குள் தீவிர​வா​தி​களை ஊடுரு​வச் செய்​யும் முயற்​சி​யாக சுமார் 2 மணி நேரம் பாகிஸ்​தான் படை​யினர் துப்​பாக்​கி​யால் சுட்​டனர்.

இதற்கு இந்​திய ராணுவம் தரப்​பில் தகுந்த பதிலடி தரப்​பட்​டது. அப்​போது தீவிர​வாதிகளின் ஊடுரு​வல் முயற்சி முறியடிக்கப்பட்டது. பாகிஸ்​தானில் உள்​நாட்​டுப் பிரச்சினைகளில் இருந்து மக்​களின் கவனத்தை திசை திருப்​பவே, பாகிஸ்​தான் ராணுவம் துப்​பாக்​கிச் சூட்டை நடத்​தி​யுள்​ள​தாக ​பாது​காப்​புத்​ துறை நிபுணர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு
வேலையில்லா பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.4 ஆயிரமாக உயர வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in