

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள பாகீரத்புரா பகுதியில் பொதுக் கழிப்பறையில் இருந்து வெளியேறிய கழிவுநீர் குடிநீர் குழாய்களில் கலந்ததால் குடிநீர் மாசுபட்டது. இதனால் பலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
பாகீரத்புராவில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “பாகீரத்புராவில் 2,354 குடும்பங்களை சேர்ந்த 9,416 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதிதாக 20 நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.
நோய்த் தொற்று பரவிய பிறகு 398 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 256 பேர் குணடைந்து வீடு திரும்பினர். 142 பேர் சிகிச்சையில் உள்ளனர்’’ என்றார்.