உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரான ட்ரோனை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரான ட்ரோனை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
Updated on: 
1 min read

ஜெய்ப்பூர்: உள்​நாட்​டுத் தொழில்​நுட்​பத்​தில் தயாரிக்​கப்​பட்​டுள்ள நாட்​டின் முதல் தானியங்கி ட்​ரோன் எதிர்ப்பு ஏவு​கணை நேற்று வெற்​றிகர​மாக சோதித்​துப் பார்க்​கப்​பட்​டது.

இந்​திய பாது​காப்​புத் துறையை சேர்ந்த ஐஜி டிபென்ஸ் நிறு​வனம், தற்​சார்பு இந்​தியா திட்​டத்​துக்கு ஊக்​கமளிக்​கும் வகை​யில், முற்​றி​லும்உள்​நாட்​டுத் தொழில்​நுட்​பத்​தில் ஜ்வாலா எம்.கே.-1’ என்ற நாட்​டின் முதல் தானியங்கி ஆளில்லா விமான (ட்​ரோன்) எதிர்ப்பு மைக்ரோ ஏவு​கணையை உரு​வாக்கி உள்​ளது.

ராஜஸ்தானில் உள்ள பொக்​ரான் ஏவு மையத்​தில், இந்த ஏவு​கணை நேற்று வெற்​றிகர​மாக சோதனை செய்து பார்க்​கப்​பட்​டது.

“இந்த ஏவு​கணை 2 முதல் 5 கி.மீ. தொலை​வில் உள்ள எதிரி ட்​ரோன்​களை​யும், தரையி​லிருந்து 50 மீட்​டர் முதல் 5,000 மீட்​டர் உயரத்​தில் பறக்​கும் ட்​ரோன்​களை​யும் தாக்கி அழிக்​கும் திறன் வாய்ந்​தது” என்று ஐஜி டிபென்ஸ் தெரி​வித்​துள்​ளது.

இதில் ‘கிரிட்’ எனப்​படும் செயற்கை நுண்​ணறிவு அடிப்​படை​யி​லான தானியங்கி செயல்​பாடு மற்​றும் போர் மேலாண்மை மென்​பொருள் முக்​கிய அம்​ச​மாக உள்​ளது. இது பல்​வேறு சென்​சார்​களில் இருந்து கிடைக்​கும் தகவல்​களை ஒருங்​கிணைத்து, இலக்​கு​களைக் கண்​டறிந்து வகைப்​படுத்து​கிறது. மேலும், தாக்​குதல் தொடர்​பான முடிவு​களை எடுக்​கவும், ஏவு​கணைத் தாக்​குதல் நட​வடிக்​கைகளை ஒருங்​கிணைக்​கவும் உதவு​கிறது.

ஒரே நேரத்​தில் அதிக எண்​ணிக்​கை​யில் ட்​ரோன் தாக்​குதல் நடத்​தும் சூழலிலும், இந்த ஏவு​கணை​யில் உள்ள வெடிகுண்​டில் இருந்து சிதறும் உலோகத் துண்​டுகள் சுற்​றியுள்ள மற்ற ட்​ரோன்​களை​யும் தாக்கி அழிக்​கும் திறன் கொண்​டவை.

உளவு பார்த்​தல், கண்​காணிப்பு மற்​றும் ராணுவ முகாம்​கள், வீரர்​கள் மீது தாக்​குதல் நடத்​து​தல் போன்ற நட​வடிக்​கைகளுக்கு குறைந்த செல​வி​லான ட்​ரோன்​கள் அதி​களவில் பயன்​படுத்​தப்​படு​கின்​றன. இதற்கு எதிரான நட​வடிக்​கை​யாக இந்த ஏவு​கணை அமைப்பு உரு​வாக்​கப்​படு​கிறது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரான ட்ரோனை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
திருப்பரங்குன்றத்தில் 144 தடை: 7,000 போலீஸ் குவிப்பு, பதற்றம்

X