

புதுடெல்லி: இந்தியாவில் நடைபெறும் போராட்டங்கள் அதன் உள்நாட்டு விவகாரம் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியா வந்துள்ளார். இந்நிலையில், இந்தியாவில் அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டம் குறித்தும் அதுகுறித்த விமர்சனங்கள் குறித்தும் அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறும்போது, “இங்கு நடைபெறும் போராட்டங்கள் உள்நாட்டு அரசியல் விவகாரம். நான் இதைப் பற்றி எதுவும் தெரிவிக்கப் போவதில்லை.
இதுவொரு ஜனநாயகம், இங்கு தேர்தல்கள் நடக்கின்றன. உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அமெரிக்காவிலும் நாங்கள் ஒவ்வொரு நாளும் போராட்டங்களை எதிர்கொள்கிறோம். எனவே, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை,’’ என்றார்.