இந்தியாவின் சாதனைகளை உலகறிய செய்ய வேண்டும்: ஊடகங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

இந்தியாவின் சாதனைகளை உலகறிய செய்ய வேண்டும்: ஊடகங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
Updated on: 
1 min read

புதுடெல்லி: இந்தியாவின் சாதனைகளை உல​கறிய செய்ய வேண்​டும் என்று ஊடகங்​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி அழைப்பு விடுத்​துள்​ளார்.

தீபாவளியை ஒட்டி டெல்​லி​யில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்​தில் செய்​தி​யாளர்​களுக்கு நேற்று சிறப்பு விருந்து அளிக்​கப்​பட்​டது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது அவர் பேசிய​தாவது: கடந்த 2001-ல் டெல்லி அசோகா சாலை​யில் பாஜக தலைமை அலு​வல​கம் செயல்​பட்​டது. அப்​போது ஒருநாள் எனது அறைக்​குள் செய்​தி​யாளர்​கள் திடீரென நுழைந்தனர். சிலர் அன்​போடு எனது சட்டை காலரை பிடித்து இழுத்​தனர். சிலர் இனிப்​பு​களை வாங்​கித் தரு​மாறு நிர்​பந்​தம் செய்​தனர்.

என்ன விசேஷம், எதற்​காக இப்​போது இனிப்​பு​களை கேட்​கிறீர்​கள் என்று செய்​தி​யாளர்​களிடம் கேள்வி எழுப்​பினேன். அப்​போது அவர்​கள், “நீங்​கள்​தான் அடுத்தகுஜராத் முதல்​வர், அதை கொண்​டாடவே இனிப்​பு​களை வாங்க கோரு​கிறோம்” என்று மகிழ்ச்சியுடன் தெரி​வித்​தனர். நான் குஜராத் முதல்​வ​ராக தேர்வு செய்​யப்​பட்​டது செய்​தி​யாளர்​கள் மூலமாகவே எனக்​குத் தெரியவந்​தது. ஏராளமான செய்​தி​யாளர்​கள் தங்​களது சொந்த செல​வில் எனது பத​வி​யேற்பு விழா​வில் பங்​கேற்​றனர்.

பூகம்​பம், வெள்​ளம் உள்​ளிட்ட இயற்கை பேரிடர்​களின்​போது செய்​தி​யாளர்​கள் தங்​கள் உயிரை பணயம் வைத்து செய்​தி​களை சேகரிக்​கின்​றனர். அவர்​களது தன்​னலமற்ற சேவையைப் பாராட்டு​கிறேன். ஊடகத் துறை அபார​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. வரும் 2047-ம் ஆண்​டுக்​குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உரு​வாக்க வேண்​டும் என்று காலக்​கெடுவை நிர்ணயித்து உள்​ளோம். இந்த லட்​சி​யத்தை எட்ட அனைவரும் ஒன்​றிணைந்து உழைக்க வேண்​டும்.

மொபைல்​போன் உற்​பத்​தி​யில் இந்​தியா முன்​வரிசையில் உள்ளது. அதிக ஸ்​டார்ட் அப் நிறு​வனங்​கள் கொண்ட நாடாக இந்தியா உரு​வெடுத்​திருக்​கிறது. இந்​தி​யாவின் யுபிஐ பணப் பரிமாற்​றம், ஒட்​டுமொத்த உல​கத்​தையும் வியப்​பில் ஆழ்த்தி உள்ளது.

உலக வங்கி சமீபத்​தில் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “கடந்த 12 ஆண்​டுகளில் இந்​தி​யாவில் 50 கோடி மக்​கள் வறுமையில் இருந்து மீண்டு உள்​ளனர்” என்று புகழாரம் சூட்​டப்​பட்டு உள்​ளது. இதுபோல பல்​வேறு சாதனைகளை இந்​தியா படைத்து வரு​கிறது. இந்த சாதனைகளை இந்​திய ஊடகங்​கள் உல​கறியச் செய்ய வேண்​டும். இந்​தி​யர்​களின் திறமை, சாதனைகளை​யும் உலகத்துக்கு வெளிச்​சம் போட்டு காட்ட வேண்​டும். இவ்​வாறு அவர் பேசினார்.

இந்தியாவின் சாதனைகளை உலகறிய செய்ய வேண்டும்: ஊடகங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
உ.பி.யில் உருவானது 3-வது அணி: 403 தொகுதிகளிலும் போட்டி என ஒவைசி - ஆசாத் அறிவிப்பு

X