இந்தியர்கள் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள்: ஐரோப்பிய போராட்டங்களைச் சுட்டிக்காட்டி பியூஷ் கோயல் பெருமிதம்

இந்தியர்கள் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள்: ஐரோப்பிய போராட்டங்களைச் சுட்டிக்காட்டி பியூஷ் கோயல் பெருமிதம்
Updated on: 
1 min read

பெர்லின்: வெளி​நாடுகளில் வாழும் இந்தியர்கள் வன்முறை​யில் ஈடு​பட​மாட்​டார்​கள் என்று மத்​திய வர்த்​தக அமைச்​சர் பியூஷ் கோயல் புகழாரம் சூட்​டி உள்​ளார். மத்திய அமைச்​சர் பியூஷ் கோயல் ஜெர்​மனிக்கு இரண்டு நாட்​கள் அரசுமுறைப் பயணம் மேற்​கொண்டு உள்​ளார்.

பெர்லின் நகரில் வாழும் இந்​திய வம்​சாவளி​யினர் மத்​தி​யில் அவர் பேசிய​தாவது: பிரான்ஸ், ஸ்பெயின், இத்​தாலி உள்​ளிட்ட பல்வேறு ஐரோப்​பிய நாடுகளில் விலை​வாசி உயர்வு, ஊதிய உயர்வு கோரி நடை​பெறும் போராட்​டங்​கள் வன்​முறை​யாகவும், பொதுச்​சொத்​துகள் சேதப்​படுத்​தப்​படும் நிகழ்​வு​களாகவும் மாறி வருகின்றன. ஆனால், இந்​திய சமூகத்​தினர் எப்​போதும் அமைதியை விரும்​புபவர்​கள்.

தங்​கள் குடும்​பங்​களின் நலனில் அக்​கறை கொண்​ட​வர்​கள் என்பது உலக நாடுகளுக்​குத் தெரியும். இந்​தி​யர்​கள் தெருக்​களில் இறங்கி வன்​முறை​யிலோ, சமூகத்​திற்கு இடையூறு விளை​விக்​கும் செயல்​களிலோ ஈடு​பட மாட்​டார்​கள் என்ற நம்​பிக்கை இருப்பதால்தான், எந்​தவொரு நாட்​டிலும் அவர்​கள் அன்​போடு வரவேற்​கப்​படு​கிறார்​கள். ஜெர்​மனிக்கு புதிதாக உயர்​கல்வி கற்க வரும் இந்​திய மாணவர்​களுக்கு குறிப்​பாகப் பொருளாதா​ரத்​தில் பின்​தங்​கிய பின்​புலத்​தைக் கொண்​ட​வர்​களுக்கு இங்கு நீண்டகாலமாக வாழும் இந்​தி​யர்​கள் உறுதுணை​யாக இருக்க வேண்டும்.

இந்​தியா-ஜெர்​மனி இடை​யி​லான பொருளாதார மற்​றும் மக்​கள் தொடர்பை வலுப்​படுத்​து​வதில் புலம்​பெயர்ந்த இந்​தி​யர்​களின் பங்கு மிக முக்​கிய​மானது. இவ்​வாறு அவர் பேசினார். தனது பயணத்​தின்போது ஜெர்​மனி அரசு அதி​காரி​கள், தொழிலதிபர்​கள் மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனங்​களின் பிரதி​நி​தி​களைச் சந்​தித்த அமைச்​சர் பியூஷ் கோயல், வர்த்​தகம், முதலீடு மற்​றும் புதிய தொழில்​நுட்​பத் துறைகளில் இரு நாடுகளுக்கு இடை​யி​லான ஒத்துழைப்பை அதி​கரிப்​பது குறித்து ஆலோ​சனை நடத்​தினார்.

இந்தியர்கள் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள்: ஐரோப்பிய போராட்டங்களைச் சுட்டிக்காட்டி பியூஷ் கோயல் பெருமிதம்
சென்னையில் மின்வெட்டை தடுக்க 2,600 ஒப்பந்த ஊழியர்கள் நியமனம்: மின்வாரியம் நடவடிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in