வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றம்: அமெரிக்காவை விட முஸ்லிம் நாடுகளில் அதிகம்

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்​கா​வில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளி​நாட்டினரை அதிபர் டொனல்டு ட்ரம்ப் நாடு கடத்தி வருகிறார். அதன்படி இந்தியர்களும் ஆயிரக்கணக்கில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

எனினும், அமெரிக்​காவை விட முஸ்​லிம் நாடு​களில் இருந்து வெளி​யேற்​றப்​படும் இந்தியர்களின் எண்​ணிக்கை அதி​க​மாக உள்​ளது. இது குறித்து சமீபத்தில் முடிவடைந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, மாநிலங்​களவை​யில் கேட்​கப்​பட்ட ஒரு கேள்விக்கு எழுத்​துப்​பூர்​வ​மாக வெளி​யுறவுத் துறை இணை அமைச்​சர் கீர்த்தி வர்​தன் சிங் அளித்த பதிலில் கூறி​யிருப்​ப​தாவது:

கடந்த 5 ஆண்​டு​களில் அமெரிக்​காவை விட சவுதி அரேபியா அதிக இந்​தி​யக் குடிமக்​களை நாடு கடத்​தி​யுள்​ளது. இதில், விசா காலா​வதி மற்​றும் தொழிலா​ளர் சட்ட மீறல்​கள் அடங்​கும்.

உண்​மை​யில், பல வெளி​நாட்டு அரசுகள் தடுப்​புக்​காவல் தரவு​களைப் பகிர்​வ​தில்​லை. இருப்​பினும், அவசர கால விசாக்​களின் மூலம் வெளி​நாடு​களில் உள்ள இந்​தி​யர்​களுக்கு எதி​ராக எடுக்​கப்​பட்ட நடவடிக்​கை​களின் விவரங்​கள் வெளி​யாகி விடு​கின்​றன.

அமெரிக்​கா​வில் கடுமை​யான குடியேற்​றச் சட்​டங்​கள் அறிவித்த போதி​லும், அங்​கிருந்து நாடு கடத்​தப்​பட்ட இந்​தி​யக் குடிமக்​களின் எண்​ணிக்கை குறை​வாகவே உள்​ளது.

அமெரிக்​கா​வில் உள்ள இந்​தி​யத் தூதரகங்​களிட​மிருந்து வெளி​யுறவுத் துறை அமைச்​சகத்​தால் பெறப்​பட்ட தரவு​களின்​படி, அமெரிக்க தூதரகங்​களான சான் பிரான்​சிஸ்​கோ, நியூ​யார்க், அட்​லாண்​டா, ஹூஸ்​டன், சிகாகோ ஆகிய​வற்​றின்​படி, இந்​தி​யர்​கள் வெளி​யேற்​றப்​படு​வது பெரும்​பாலும் இரண்டு இலக்​கங்​களில் அல்​லது ஒரு சில நூறு எண்​ணிக்​கை​யில் மட்​டுமே உள்​ளன, இது வளை​குடா நாடு​களின் புள்​ளி​விவரங்​களை விட மிகக் குறைவு.

இந்​தி​யர்​களின் வெளி​யேற்​றங்​கள் பெரும்​பாலும், விசா காலா​வ​தி​யான பிறகு தங்​கு​வது, பணி அனு​மதி இல்​லாமல் வேலை செய்​வது, உரிமை​யாளர்​களிட​மிருந்து தப்பி ஓடு​வது, உள்​ளூர் தொழிலா​ளர் சட்​டங்​களை மீறு​வது உள்​ளிட்ட காரணங்​களால் இந்​தி​யர்​கள் வெளி​யேற்​றப்​பட்​டுள்​ளனர். பல இந்​தி​யர்​களிடம் செல்​லுபடி​யாகும் பயண ஆவணங்​கள் இருப்​ப​தால், அவசர​கால விசாக்​களின் தேவை குறைந்​துள்​ளது. இவ்​வாறு அமைச்​சர் தெரி​வித்​தார்.

அமைச்​சர் கீர்த்தி சிங் பதிலின் இணைப்​பில் சில புள்ளி விவரங்களும் அளிக்​கப்​பட்​டுள்​ளன. அதன்​படி, சவுதி அரேபி​யா​விலிருந்து கடந்த 2021-ல் 8,887, 2022-ல் 10,277, 2023-ல் 11,486, 2024 -ல் 9,206 மற்​றும் 2025 -ல் இது​வரை 7,019 இந்​தி​யர்​கள் வெளி​யேற்​றப்​பட்​டுள்​ளனர்.

அமெரிக்​கா​வின் புள்​ளி​விவரத்​தின்​படி, 2021-ல் 805, 2022-ல் 862, 2023-ல் 617, 2024 -ல் 1,368 மற்​றும் 2025 -ல் 3,414 இந்​தி​யர்​கள்​ வெளி​யேற்​றப்​பட்​டுள்​ளனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
மலேரியாவை இந்தியா விரைவில் ஒழிக்கும்: மத்திய அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in