

டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சரக்குகளை ஏற்றிச் சென்ற ஒரு மரப் படகில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டு கடலில் கவிழ்ந்துள்ளது.
அந்தப் படகில் 18 இந்திய மாலுமிகள் இருந்தனர். இந்த விபத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். காயம் அடைந்த 4 பேர் துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 17 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு மீட்கப்பட்ட இந்தியர்களை சந்தித்து நலம் விசாரித்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. படகு உரிமையாளருடன் தொடர்பில் உள்ள தூதரகம், பாதிக்கப்பட்ட மாலுமிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது.