நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சாதனை

நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சாதனை
Updated on
1 min read

கார்வார்: நீர்​மூழ்​கிக் கப்​பலில் பயணம் செய்து குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு சாதனை படைத்​துள்​ளார்.

குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு கோவா, கர்​நாட​கா, ஜார்க்​கண்ட் ஆகிய 3 மாநிலங்​களில் 4 நாட்​கள் அரசு முறை பயணம் மேற்​கொண்​டுள்​ளார். இந்​நிலை​யில், தனது பயணத்​தின் ஒரு பகுதி​யாக கர்​நாடக மாநிலம் கார்​வார் துறை​முகத்​தில் இருந்து இந்​திய கடற்​படைக்​குச் சொந்​த​மான நீர்​மூழ்கி கப்​பல் மூலம் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு நேற்று கடலில் பயணம் செய்தார்.

கல்​ வாரி வகையை சேர்ந்த நீர்​மூழ்கி கப்​பலான ஐஎன்​எஸ் வாக்​‌ஷீரில் இந்​தப் பயணத்தை குடியரசுத் தலை​வர் மேற்​கொண்​டார். அவருடன் கடற்​படை தளபதி அட்​மிரல் தினேஷ் கே.​திரி​பாதி உள்​ளிட்ட அதி​காரி​கள் பயணம் செய்​தனர். முன்​னாள் குடியரசுத் தலை​வர் அப்​துல் கலா​முக்​குப் பிறகு நீர்​மூழ்​கி​யில் பயணம் செய்த 2-வது இந்​திய குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு தான் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

முன்​ன​தாக கர்​நாட​கா​வின் வட கனரா மாவட்​டத்​தி​லுள்ள கார்​வார் கடற்​படைத் தளத்​துக்​கு, கோவா​வில் இருந்து நேற்று காலை குடியரசுத் தலை​வர் முர்மு வருகை தந்​தார். கடந்த அக்​டோபர் மாதம், நாட்​டின் மேம்​படுத்​தப்​பட்ட பன்​முகத் தாக்​குதல் திறன் கொண்ட போர் விமான​மான ரஃபேலில், குடியரசுத் தலை​வர் திரவுபதி முர்மு பறந்​தது குறிப்​பிடத்தக்​கது.

இதற்கு முன்​ன​தாக, கடந்த 2006-ம் ஆண்டு அப்​போதைய குடியரசுத் தலை​வர் டாக்​டர் ஏ.பி.ஜே.அப்​துல் கலாம் முதல்முறையாக நீர்​மூழ்​கிக் கப்​பலில் பயணம் செய்​திருந்​தார். சுமார் 19 ஆண்​டு​களுக்​குப் பிறகு தற்​போது திர​வுபதி முர்​மு, நீர்மூழ்​கிக் கப்​பல் பயணத்தை மேற்​கொண்​டுள்​ளார்.

நாட்​டின் மேற்கு கடற்​கரைப் பகு​தி​யில் அமைந்​துள்ள கார்​வார் கடற்​படைத் தளம், நாட்​டின் மிக முக்​கிய​மான பாது​காப்பு மையங்​களில் ஒன்​றாக உள்​ளது. இந்​தப் பயணத்​தின் மூலம் நாட்​டின் கடல்​சார் பாது​காப்​புத் தயார்​நிலை மற்​றும் கடற்​படை​யின் செயல்பாட்டுத் திறனை குடியரசுத் தலை​வர் முர்மு நேரடி​யாகப் பார்​வை​யிட்​டார்.

இது நாட்​டின் பாது​காப்​புத் துறை​யின் உள்​கட்​டமைப்பு மற்​றும் தன்​னிறைவு மீதான நம்​பிக்​கையை உலகுக்கு பறை​சாற்​று​வ​தாக அமைந்​துள்​ளது என்று இந்​திய கடற்​படை வெளி​யிட்​டுள்​ள செய்திக்​குறிப்​பில்​ தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சாதனை
ஆரவல்லி மலையில் பேரழிவு: அரசுக்கு காங். எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in