

கோப்புப்படம்
புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபிந்தர் யாதவுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தரையில் இருந்து 100 மீட்டர் மற்றும் அதற்கு மேல் உயரம் கொண்ட மலைகள் மட்டுமே இனிமேல் ஆரவல்லி மலைகளாக அங்கீகரிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், கடந்த 2010-ம் ஆண்டே 3 டிகிரி அல்லது அதற்கு மேற்பட்ட சாய்வு கொண்ட அனைத்து பகுதிகளும் ஆரவல்லி மலைகளாக வரையறுக்க வேண்டும் என்று வனத்துறை கூறியுள்ளது.
மேலும் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை மணல் புயல் பாதிப்புகளில் இருந்து ஆரவல்லி மலைத் தொடர் பாதுகாக்கிறது. பாலைவனம் அதிகரிப்பதை தடுக்கிறது என்று வனத்துறை கூறியுள்ளது. நூறு மீட்டர் உயரம் என்ற புதிய வரையறையால் ஆரவல்லி மலைத்தொடரில் பேரழிவு ஏற்படும். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தனது கடிதத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.