சீனாவுக்கான இந்திய மருந்து ஏற்றுமதி அதிகரிக்கும்: தூதர் விக்ரம் துரைசாமி தகவல்

சீனா​வுக்​கான இந்​திய தூதர் விக்​ரம் துரை​சாமி

சீனா​வுக்​கான இந்​திய தூதர் விக்​ரம் துரை​சாமி

Updated on
1 min read

பெய்ஜிங்: இந்​தி​யா, சீனா​வுக்கு இடையி​லான வர்த்​தகப் பற்றாக்குறை அதி​கரித்து வரு​கிறது. இருதரப்பு ஏற்​றும​தி​யை சமநிலைப்​படுத்த மத்​திய அரசு பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது.

குறிப்​பாக சீனா​வின் தகவல் தொழில்​நுட்​பம், மருந்​து, வேளாண்துறை சந்​தைகளை இந்​திய நிறு​வனங்​களுக்கு திறந்துவிட வேண்​டும் என்று வலி​யுறுத்​தப்​பட்டு வரு​கிறது. இதுதொடர்​பாக சீனா​வுக்​கான இந்​திய தூதர் விக்​ரம் துரை​சாமி அண்​மை​யில் சீன வர்த்தக துறை மூத்த அதி​காரி​களைச் சந்தித்துப் பேசி​னார். அப்​போது பல்​வேறு முக்​கிய உடன்​பாடு​கள் எட்​டப்​பட்​டன.

இந்​தச் சூழலில் தூதர் விக்​ரம் துரை​சாமி பெய்​ஜிங்​கில் நேற்று நிருபர்​களிடம் கூறும்போது, “இந்​தி​யா, சீனா​வுக்கு இடையி​லான உறவில் வர்த்​தகம் மிக முக்​கிய பங்கு வகிக்​கிறது. சீனா​வுக்கு அதிக பொருட்​களை, குறிப்​பாக மருந்​துகளை அதி​கள​வில் ஏற்றுமதி செய்ய விரும்​பு​கிறோம். தற்​போது சீனாவில் இந்​தி​யப் பொருட்​களை விற்​பனை செய்​வதற்​கான பல்​வேறு கட்டுப்பாடுகள் நீக்​கப்​பட்டு உள்​ளன.

இதன்​மூலம் சீனா​வுக்கு ஏற்​றுமதி செய்​யப்​படும் இந்​திய மருந்துகளின் அளவு கணிச​மாக அதி​கரிக்​கும். மேலும் இந்தியாவில் சீன நிறு​வனங்​கள் அதி​கள​வில் முதலீடு செய்து வருகின்​றன” என்றார்.

<div class="paragraphs"><p>சீனா​வுக்​கான இந்​திய தூதர் விக்​ரம் துரை​சாமி</p></div>
“மிகப்பெரிய எரிசக்தி சவாலை வெற்றிகரமாக சமாளித்தோம்” - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in