இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய் - மகன் பிரிட்டனில் மேயர்களாக தேர்வாகி சாதனை

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய் - மகன் பிரிட்டனில் மேயர்களாக தேர்வாகி சாதனை
Updated on
1 min read

சண்டிகர்: ஹரி​யானா மாநிலம் ரோஹ்தக் பகு​தி​யைச் சேர்ந்த ஒரு குடும்​பம், கடந்த 2013-ம் ஆண்​டில் பிரிட்​ட​னுக்​குக் குடிபெயர்ந்தது. தற்​போது அந்​தக் குடும்​பத்​தைச் சேர்ந்த துஷார் குமாரும் (23), அவரது தாய் பர்​வீன் ராணி​யும் பிரிட்​டனில் அடுத்தடுத்து மேயர்​களாகத் தேர்​வாகி சாதனை படைத்​துள்ளனர்.

இதன் மூலம் பிரிட்​டன் வரலாற்​றிலேயே மிகக் குறைந்த வயதில் மேயர் நாற்​காலி​யில் அமர்ந்த இந்​திய வம்​சாவளி இளைஞர் என்ற பெரு​மையை துஷார் குமார் பெற்​றுள்​ளார். துஷார் குமார் ‘எல்ஸ்ட்ரி மற்​றும் போஹம்​வுட்’ நகர சபை​யின் மிக இள வயது மேய​ராகப் பொறுப்​பேற்​றுள்​ளார். அவர் பதவி​யேற்ற ஒரு வார இடைவெளி​யில், அவரது தாய் பர்​வீன் ராணி ‘ஹெர்ட்​ஸ்​மியர்’ பெருநகர சபை​யின் முதல் இந்​திய வம்​சாவளி மேய​ராகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்டு சாதனை படைத்​துள்​ளார்.

இதுகுறித்து துஷாரின் தந்​தை​யும் தொழில​திபரு​மான சுனில் தஹியா பிடிஐ செய்தி நிறு​வனத்​திடம் கூறுகை​யில், “கடந்த மே 13-ம் தேதி துஷார் மேய​ராகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். அதனைத் தொடர்ந்து மே 20-ம் தேதி பர்​வீன் மேய​ராகப் பதவி​யேற்​றார். ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த தாயும் மகனும் ஒரே நேரத்​தில் மேயர்​களாகப் பொறுப்​பேற்​றிருப்​பது ஒட்​டுமொத்த இந்​திய வம்​சாவளி​யினருக்​கும் பெருமை சேர்க்​கும் விஷய​மாகும்’’ என்​றார்.

ஹரி​யானாவின் சோனிபட் மாவட்​டத்​தில் உள்ள கர்​கோடா பகுதியின் ரோஹ்னா கிராமத்​தை பூர்​வீக​மாகக் கொண்ட தஹியா குடும்​பத்​தினர், பிரிட்​டன் செல்​வதற்கு முன்பு நீண்ட காலம் ரோஹ்தக்​கில் வசித்து வந்​தனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய் - மகன் பிரிட்டனில் மேயர்களாக தேர்வாகி சாதனை
நல்வழியாளர் பாதுகாப்புச் சட்டம் தெரியுமா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in