

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை குறித்த சர்வதேச மாநாடு 21-ம் தேதி டெல்லியில் தொடங்குகிறது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்கள் பங்கேற்கின்றனர். சர்வதேச மாநாட்டில் இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்படும்.
இந்தியாவின் 4 ஐஐடி, 6 ஐஐஎம் கல்வி நிறுவனங்களை சேர்ந்த நிபுணர்களும் மாநாட்டில் பங்கேற்கின்றனர். அவர்கள் தேர்தல் ஆணையத்தின் டிஜிட்டல் பணிகள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.
இந்த சூழலில் சர்வதேச மாநாடு தொடர்பாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது மாநாட்டில் விவாதிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து கலந்தாலோசனை நடைபெற்றது.