அமெரிக்காவில் ரூ.26 லட்சத்துக்கு விற்பனையாகும் எச்ஐவி மருந்தை ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரூ.3,700-க்கு வழங்கும் இந்திய நிறுவனம்

அமெரிக்காவில் ரூ.26 லட்சத்துக்கு விற்பனையாகும் எச்ஐவி மருந்தை ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரூ.3,700-க்கு வழங்கும் இந்திய நிறுவனம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: அமெரிக்கா​வில் ரூ.26 லட்​சத்​துக்கு விற்​பனையாகும் எச்ஐவி மருந்தை ஆப்பிரிக்க நாடுகளுக்கு வெறும் ரூ.3,700-க்கு இந்திய நிறுவனம் வழங்​கு​கிறது.

அமெரிக்​காவை தலை​மையிட​மாக கொண்டு இயங்​கும் ‘கிலியட் சயின்​சஸ்’ என்​கிற மருந்து நிறு​வனத்​தால் உரு​வாக்​கப்​பட்ட ‘லெனாகாபவிர்’ எச்​ஐவி(எய்ட்ஸ்) தொற்று ஏற்​படுவதைத் தடுக்கும் ஒரு நவீன ஊசி மருந்​தாகும். இது​வரை எச்​ஐவி தடுப்புக்காக தினசரி மாத்​திரைகள் எடுத்​துக்​கொள்ள வேண்​டிய நிலை இருந்​தது. ஆனால், லெனாகாபவிர் ஊசியை ஆண்​டுக்கு இரண்டு முறை மட்​டுமே செலுத்​திக்​கொண்​டால் போது​மானது. மருத்​து​வப் பரிசோதனைகளில் இந்த மருந்து எச்​ஐவி தொற்​றைத் தடுப்​ப​தில் கிட்​டத்​தட்ட 100 சதவீத செயல்​திறன் கொண்​டது என நிரூபிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் ஹைத​ரா​பாத்தை தலை​மையிட​மாகக் கொண்ட இந்​திய மருந்து நிறு​வனமான ‘ஹெட்​டிரோ’, லெனாகாபவிர் ஊசியை ஆப்​பி​ரிக்க நாடுகளுக்கு மிகக் குறைந்த விலை​யில் விநியோகிக்​கத் தொடங்​கி​யுள்​ளது. அமெரிக்​கா​வில் ஆண்​டுக்கு சுமார் 28,000 டாலர் (சுமார் ரூ.26 லட்​சத்​துக்​கும் மேல்) விலை​யில் விற்​கப்​படும் இந்த உயிர்​காக்​கும் மருந்து, இனி ஆப்​பி​ரிக்க நாடுகளில் ஒரு​வருக்கு ஆண்​டுக்கு வெறும் 40 டாலர் (சுமார் ரூ.3,700) என்ற விலை​யில் கிடைக்​கவுள்​ளது.

ஹெட்​டிரோ நிறு​வனம், முதற்​கட்​ட​மாக 3 லட்​சம் குப்​பிகளை ஆப்பி​ரிக்க நாடுகளான சாம்​பியா, உகாண்டா மற்​றும் ஜிம்பாப்வே ஆகிய​வற்​றுக்கு அனுப்​பும் நட​வடிக்​கையை தொடங்கி​யுள்​ளது. இதில் முதல் தொகுப்பு மருந்​துகள் ஏற்கெனவே சாம்​பியாவைச் சென்​றடைந்​துள்​ள​தாகவும், தொடர்ந்து உகாண்டா மற்​றும் ஜிம்​பாப்வே ஆகிய நாடுகளுக்​கும் விநியோகிக்​கப்​பட உள்​ள​தாகவும் தகவல்​கள் தெரி​விக்​கின்​றன.

குறைந்த மற்​றும் நடுத்​தர வரு​மானம் கொண்ட 120 நாடுகளில் இந்த மருந்தை விநியோகிப்​ப​தற்​காக, ஹெட்​டிரோ, டாக்​டர் ரெட்டீஸ், எம்​கியூர் உள்​ளிட்ட 6 ஜெனரிக் மருந்து தயாரிப்பு நிறுவனங்​களுக்கு கிலியட் சயின்​சஸ் நிறு​வனம் ராயல்டி இல்லாத உரிமத்தை வழங்​கி​யுள்​ளது. குளோபல் ஃபண்ட் உள்ளிட்ட சர்​வ​தேச அமைப்​பு​கள் முன்​பண நிதி​யுதவி மற்​றும் கொள்​முதல் உத்​தர​வாதங்​களை வழங்​கி​யுள்​ளன.

இதனால் அசல் விலையை விட 99.8 சதவீதம் குறைவான விலையில் இம்​மருந்து வழங்​கப்​படு​கிறது. ஆரம்​பகட்ட விநியோகங்​களுக்​குப் பிறகு, 2027-ம் ஆண்​டின் தொடக்​கத்​தில் மேலும் 10 ஆப்​பி​ரிக்க நாடுகளுக்கு ஜெனரிக் லெனாகாபவிர் மருந்தை வழங்​கத் திட்​ட​மிட்​டுள்​ள​தாக ஹெட்​டிரோ நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. ஒழுங்​குமுறை ஒப்​புதல்​களுக்கு உட்​பட்டு, வரும் மாதங்​களில் இந்த மருந்தை இந்​தி​யாவில் அறி​முகப்​படுத்​தவும் அந்​நிறு​வனம் திட்​ட​மிட்​டுள்​ளது.

அமெரிக்காவில் ரூ.26 லட்சத்துக்கு விற்பனையாகும் எச்ஐவி மருந்தை ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரூ.3,700-க்கு வழங்கும் இந்திய நிறுவனம்
‘நீதிமன்றத்தின் உத்தரவை யாரும் நீர்த்துப் போகச் செய்ய முடியாது’ - திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் திட்டவட்டம்

X