ஏவுகணைகளை தயாரிக்க இந்திய நிறுவனங்களுக்கு அனுமதி: டிஆர்டிஓ தொழில்நுட்பங்களை வழங்க ராஜ்நாத் ஒப்புதல்

ஏவுகணைகளை தயாரிக்க இந்திய நிறுவனங்களுக்கு அனுமதி: டிஆர்டிஓ தொழில்நுட்பங்களை வழங்க ராஜ்நாத் ஒப்புதல்
Updated on
1 min read

புதுடெல்லி: பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ ) உரு​வாக்​கி​யுள்ள அனைத்து வகை​யான மரபு​சார் ஏவுகணை அமைப்​பு​களின் உற்​பத்​தித் தொழில்​நுட்​பத்தை உள்நாட்​டுப் பாது​காப்​புத் துறை நிறு​வனங்​களுக்கு வழங்க பாதுகாப்பு அமைச்​சர் ராஜ்நாத் சிங் ஒப்​புதல் அளித்​துள்​ளார்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: உள்​நாட்​டிலேயே ஏவு​கணை உற்​பத்​தியை விரைவுபடுத்​த​வும், பாது​காப்​புத் தேவை​களுக்​குப் பிற நாடு​களைச் சார்ந்​திருப்​ப​தைக் குறைக்​க​வும் தீவிர நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

இதன் மூலம் குறு, சிறு மற்​றும் நடுத்தர தொழில் நிறு​வனங்​கள் உள்​ளிட்ட இந்​திய நிறு​வனங்​களின் பங்​களிப்பை விரி​வாக்​கம் செய்ய திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. அதன் ஒருபகு​தி​யாக, தகுந்த தகுதிச் சான்​றிதழ்​கள் மற்​றும் ஒழுங்​கு​முறை நடை​முறை​களுக்கு உட்பட்டு டிஆர்​டிஓ உரு​வாக்​கிய ஏவு​கணை​களை தயாரிக்​கத் தகுதி​யுள்ள இந்​திய நிறு​வனங்​களுக்கு இந்​தத் தொழில்​நுட்​பங்​கள் வழங்​கப்​படும்.

இதற்கு பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் ஒப்​புதல் அளித்​துள்​ளார். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. ஏவு​கணை​கள், பீரங்கி குண்​டு​கள் மற்​றும் வெடிமருந்​துகள் உற்​பத்​தி​யில் தனி​யார் துறையை ஈடு​படுத்​து​வது குறித்து மத்​திய அசு பரிசீலித்து வரு​வ​தாக கடந்த 2025 அக்​டோபரில் தகவல் வெளி​யானது. இந்நிலை​யில், தற்​போது அதற்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

ஏவுகணைகளை தயாரிக்க இந்திய நிறுவனங்களுக்கு அனுமதி: டிஆர்டிஓ தொழில்நுட்பங்களை வழங்க ராஜ்நாத் ஒப்புதல்
மீண்டும் தலைதூக்கும் சோமாலியா கடற்கொள்ளையர்கள்? - ஈரான் போர் தாக்கமும் பின்னணியும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in